செய்துங்கநல்லூர் அருகே உள்ள முறப்பநாடு, கருங்குளம் தாமிரபரணி ஆற்றில் தை அமாவாசையை முன்னிட்டு தங்களது முன்னோர்களுக்கு தர்பணம் கொடுக்கும் நிகழ்ச்சி நடந்தது.
வல்லநாடு அருகே உள்ள முறப்பநாடு சிவகாமி சமேத கைலாசநாதர் ஆலயம் நவகைலாயங்களில் நடுக்கைலாயம் என அழைக்கப்படுகிறது. இந்த கோயில் முன்பு தாமிரபரணி வடக்கில் இருந்து தெற்கு நோக்கி ஓடுகிறது. காசிக்கு இணையாக போற்றப்படும் இந்த தலத்தினை தெட்சனகங்கை எனப் போற்றுகிறார்கள். இங்கு தர்பணம் செய்தால் காசியில் சென்று தன் முன்னோர்களுக்கு தர்பணம் செய்தாக கருதப்படுகிறது. எனவே அதிகாலை 5 மணி முதல் ஏராளமான மக்கள் குவிந்தனர்.
அதே போலவே தென்திருப்பதி எனப் போற்றப்படும் கருங்குளம் தாமிரபரணி ஆற்றில் ஏராளமானவர்கள் தங்கள் முன்னோர்களுக்கு தர்பணம் செய்தனர்.
இந்த ஆண்டு பாலம் கட்டப்பட்ட காரணத்தினால் தாமிரபரணி ஆற்றில் இறங்கி செல்ல பாதை கிடையாது. ஆனாலும் கரடுமுரடான சாலை வழியாக பகதர்கள் இறங்கி சென்று தங்கள் முன்னோருக்கு தர்பணம் செய்தனர்.