கருங்குளத்தில் நடந்த கபாடி போட்டியில் சபரி டிரான்ஸ்போர்ட் அணி முதல் பரிசு பெற்றது.
கருங்குளத்தில் போஸ் கபாடி குழு மற்றும் ஊர் பொதுமக்கள் சார்பில் கபாடி போட்டி நடந்தது. இந்த போட்டியில் 70 அணிகள் மோதின. போட்டியை ஊர்பிரமுகர் பண்டாரம் தலைமையில் இன்ஸ்பெக்டர் சோமன்ராஜன் துவக்கி வைத்தார்.
முதல் பரிசை சபரி டிரான்ஸ்போர்ட் அணியினரும், இரண்டாம் பரிசை கருங்குளம் போஸ் கபடி குழுவினரும், மூன்றாம் பரிசை வல்லநாடு வெள்ளைய தேவன், நான்காம் பரிசை ஏனாதி இராமணாதபுரம்அணியினரும், ஐந்தாவது பரிசை பாளையங்கோட்டை சவேரியார் கல்லூரியும், ஆறாம் பரிசை பெருங்குளம் சுப்புராஜ் அணியினரும், ஏழாம் பரிசை வெள்ளூர் அணியும், எட்டாம் பரிசை தோழாம்பண்ணை அணியினரும், ஒன்பதாம் பரிசை நாணல்காடு அணியும், பத்தாம் பரிசை கண்டியப்பேரி அணியினரும் பெற்று கொண்டனர். போட்டியில் செல்லசாமி பாண்டியன், உதயகுமார் பாண்டியன், முன்னாள் கவுன்சிலர் உதயசங்கர், உள்பட பலர் கலந்துகொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை சுடலைகண்ணு, ரகுபதி, அருணா, அம்மமுத்து, தளவாய், லெட்சுமணன் உள்பட ஊர் பொதுமக்கள் போஸ் கபாடி குழுவினர் செய்திருந்தனர்.