கருங்குளம் ஒன்றிய பகுதியில் சுதந்திர தினவிழா நடந்தது.
செய்துங்கநல்லூர் சேவியர் பாலிடெக்னிக் கல்லூரியில் நடந்த சுதந்திர தினவிழாவில் கல்லூரி முதல்வர் ஆவுடையப்பன் தலைமை வகித்தார். முதலாமாண்டு துறை தலைவர் வெங்கடேஷ், துறைத்தலைவர்கள் பாருக், பென்மேத்யூ, நாட்டு நலப்பணிதிட்ட அலுவலர் ஆறுமுகசேகர், உடற்கல்வியல் ஆசிரியர் ராகுல், அலுவலக கண்காண்பாளர் கணேசன், உள்பட பலர் கலந்துகொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை கல்லூரி தாளார் டாக்டர் ஸ்டிபன் தலைமையில் பணியாளர்கள் செய்திருந்தனர்.
செய்துங்கநல்லூர் புனித லூசியா ஆர்.சி. நடுநிலைப்பள்ளியில் சுதந்திர தினவிழா நடந்தது. தலைமை ஆசிரியை அமலா தலைமை வகித்தார். தேசிய கொடி ஏற்றப்பட்டது. மாணவ மாணவிகளின் கலைநிகழ்ச்சி நடந்தது.
ஜோஸ் மெட்ரிகுலேசன் பள்ளியில் சுதந்திர தினவிழா நடந்தது. முதல்வர் ஜெய்துன் பீவி தலைமை வகித்தார். பள்ளி நிர்வாகி ரகுமத் முன்னிலை வகித்தார். தேசிய கொடியேற்றி வைத்தனர். பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சி நடந்தது.
செய்துங்கநல்லூர் நூலகத்தில் சுதந்திர தினவிழா நடந்தது. வாசகர் வட்ட தலைவர் திருமலைநம்பி தலைமை வகித்தார். நூலகர் துரைராஜ் வரவேற்றார். தேசியகொடியேற்றி இனிப்பு வழங்கப்பட்டது.

இராமனுஜம்புதூர் அரசுமேல்நிலைப்பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் கணபதி தலைமை வகித்தார். பள்ளி தலைமை ஆசிரியை வசந்தி முன்னிலை வகித்தார். முதுகலை தமிழ் ஆசிரியை அந்தோணியம்மாள் தொகுத்து வழங்கினார். தேசியகொடியேற்றப்பட்டு, பள்ளி மாணவ மாணவிகள் கலை நிகழ்ச்சி நடந்து, பரிசுகள் வழங்கப்பட்டது. உதவி தலைமை ஆசிரியை எஸ்தர் சாரா நன்றி கூறினார்.

வல்லநாடு நூலகத்தில் சுதந்திர தினவிழா நடந்து. வாசகர் வட்ட தலைவர் இசக்கி தலைமை வகித்தார். முத்தையா முன்னிலை வகித்தார். நூலகர் தளவாய் வரவேற்றார். தேசிய கொடியேற்றப்பட்டு இனிப்பு வழங்கப்பட்டது.
செய்துங்கநல்லூரில் பாப்புலர் பிரண்ட ஆப் இந்தியா அமைப்பினர் சுதந்திர தினத்தன்று கொடியேற்றினார். பாப்புலர் பிரண்ட் திருவைகுண்டம் தலைவர் பகுதி தலைவர் அப்துல் காதர் தலைமை வகித்தார். கேம்பஸ் பிரண்ட் மாவட்ட தலைவர் அப்பாஸ், செய்துங்கநல்லூர் பகுதி செயலாளர் ஜாவித் முன்னிலை வகித்தார். எஸ்.டி.பி. ஐ. கட்சி தொகுதி செயற்குழு உறுப்பினர் உமர்ஜமான் கொடியேற்றி வைத்தார். ஊர் இளைஞர்களான கரிம், செய்யது காலித், அல்தாப், அபி, வாஸிம், இஸ்மாயில், நவாஸ், குஸ்ரத்துல்வாஹ், சிக்கந்தர், நவ்ஸாத், அசன் பலர் கலந்து கொண்டனர்.


