
சாத்தான்குளம் அருகே கண் பார்வை சரியில்லாததால் பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சாத்தான்குளம் அருகே உள்ள புத்தன்தருவையை சேர்ந்தவர் இளையபெருமாள் மனைவி ஆத்திக்கனி அம்மாள் (65).இவருக்கு 3பெண், 3ஆண் பிள்ளைகள் உள்ளனர். அதில் அனைவருக்கும் திருமணமாகி 5பேர் வெளியூரில் உள்ளனர்.ஒரு மகன் உள்ளுரில் கடை வைத்து இருந்து வருகிறார்.கணவர் இறந்து போனதால் ஆத்திக்கனி அம்மாள் இருந்து வந்தார். ஏற்கனவேஆத்திக்கனி அம்மாளுக்கு ஒரு பார்வை இழந்ததால் ஆபரேசன் செய்திருந்தார். இந்நிலையில் இன்னொரு கண்ணும் பாதிக்கப்பட்டதால் அவதியடைந்து வந்தார்.பல மருத்துவமனையில் பார்த்தும் குணமாகவில்லை ஆபரேசன் செய்து சரியாக்க பணம் இல்லாததால் விரக்தி அடைந்து காணப்பட்டார்.
இந்நிலையில் நேற்று வீட்டில் யாருமில்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்த புகாரின் பேரில் தட்டார்மடம் இன்ஸ்பெக்டர் பொன்னுச்சாமி வழக்குபதிந்து விசாரித்து வருகிறார்.