தூத்துக்குடி மாவட்டம் கருங்குளத்தில் வைத்து மஜக வின் கருங்குளம் ஒன்றிய செயலாளர் முகம்மது அலி அவர்களின் தலைமையில் பொது செயலாளர்தமிமுன் அன்சாரிக்கு சால்வை அணிவித்து உற்சாக வரவேற்பு அழிக்கப்பட்டது.
அதனை தொடர்ந்து ஊர்வலமாக ஆராம்பண்ணைக்கு அழைத்து சென்றனர் அங்கு புதிதாக கட்டப்பட்ட பாலத்தை பார்வையிட்டார்
மேலும் நிர்வாகிகளுடன் கட்சி வளர்ச்சி சம்பந்தமாக ஆலோசனை வழங்கினார். ஆராம்பண்ணை கிளை மஜக நிர்வாகிகள் சார்பாக மணல் கொள்ளை தடுப்பது சம்பந்தமாகவும்,மணல் குவாரி அமைக்கப்படாமல் தடுப்பது சம்பந்தமாகவும் கோரிக்கை வைக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் மஜக மாநில செயலாளர் தைமிய்யா, விவசாயிகள் அணி செயலாளர் நாகை முபாரக், தலைமை செயற்குழு உறுப்பினர் சாகுல் ஹமீத், மாவட்ட செயலாளர் ஜாகிர் உசேன், மாவட்ட தொழிற்சங்க அணி செயலாளர் ராசிக் முஸம்மில்,மற்றும் ஆராம்பண்ணை கிளை நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.