ஆதிச்சநல்லூர் உள்பட அகழாய்வு மற்றும் தொல்லியல் ஆய்வு செய்ய
மத்திய அரசு மாநில அரசுவுக்கு அனுமதி
அகழாய்வு ஆர்வலர்கள் மகிழ்ச்சி
ஆதிச்சநல்லூர் உள்பட அகழாய்வு செய்ய மத்திய அரசு மாநில அரசுவுக்கு அனுமதி அளித்துள்ளனர்.
ஆதிச்சநல்லூரில் மீண்டும் அகழாய்வு செய்ய வேண்டும், 2004 ல் நடந்த அகழாய்வு அறிக்கை வெளியிடவேண்டும், இங்கு உலக தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்க வேண்டும் என்று எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில் நீதிமன்ற உத்தரவின் படி மீண்டும் ஆதிச்சநல்லூரில் மாநில அரசு அகழாய்வு செய்துள்ளது. உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்க மத்திய பட்ஜெட்டில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.
இதற்கான இடத்தினை தேர்ந்தெடுக்கும் பணியை மத்திய தொல்லியல் துறை திருச்சி மண்டல கண்காணிப்பாளர் அருண்ராஜ் மற்றும் ஸ்ரீவைகுண்டம் தாசில்தார் கோபாலகிருஷ்ணன் குழுவினர் செய்து வருகின்றனர். இதற்கிடையில் அடுத்த ஆண்டு ஆய்வு மற்றும் அகழாய்வு செய்யும் பணியையும் தமிழ்நாடு மாநில அரசு செய்வதற்காக மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
இந்த தகவலை மதுரை கிளை உயர்நீதி மன்றத்தில் மத்திய அரசின் உதவி வழக்கறிஞர் விக்டோரியா கௌரி பதில் மனு (வழக்கு எண் கீ/றி(விஞி) ழிஷீ 14734/2020 தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவின் மூலமாக தமிழக அரசுவுக்கு பல்வேறு அகழாய்வு மற்றும் ஆய்வுக்கு அனுமதி அளித்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் வரும் நிதியாண்டில் மாநில தொல்லியல் துறை அகழாய்வு செய்ய மூன்று இடங்களுக்கு மத்திய தொல்லியல் துறை அனுமதி அளித்துள்ளது.
இதில் கொற்கை அருகே உள்ள அகரம், மாறமங்கலம், ஆறுமுகமங்கலம் ஆகிய இடங்களிலும், ஆதிச்சநல்லூரில் கால்வாய் மற்றும் புளியங்குளம் பகுதியிலும் ஆய்வு செய்ய அனுமதி வழங்கியுள்ளது. சிவகளையில் சிவகளை செக்கடி, ஸ்ரீமூலக்கரை, பேட்மாநகரம், பேரூர் திரடு, வெள்ளி திரடு, பராக்கிராமபாண்டி, பொட்டல்கோட்டை திரடு, ஆவரங்காடு பகுதியில் அகழாய்வு செய்யவும் அனுமதி அளித்துள்ளது. மேலும் தாமிரபரணி ஆற்று படுகையில் அகழாய்வு செய்ய வேண்டிய தொல்லியல் இடங்களை ஆய்வு செய்யவும் மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.
இதுபோல் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கீழடியில் கீழடி, கொந்தகை, அகரம், மணலூர் பகுதியையும், ஈரோடு மாவட்டம் பெருந்துறை தாலூகா கொடுமணலிலும், அரியலூர் தாலுகா கங்கைகொண்ட சோழபுரம் மல்லிகை மூடு கிருஷ்ணகிரி மாவட்டம் மயிலாடும் பாறை ஆகிய இடங்களிலும் அகழாய்வு செய்ய அனுமதி வழங்கியுள்ளது.
அதுபோலவே கொங்குமண்டலத்தில் உள்ள கோயில் கணக்கெடுப்பு திட்டத்தின் கீழ் கோயம்புத்தூர், சேலம், திருப்பூர், கரூர், ஈரோடு, நீலகிரி, தர்மபுரி, கிருஷ்ணகிரி, திண்டுகல், மற்றும் நமக்கல் மாவட்டத்தில் ஆய்வு செய்ய மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.
கிழக்கு தொடர்ச்சி மலையில் உள்ள கற்கால தளங்களை ஆய்வு செய்ய வேலூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் மாவட்டங்களில் மத்திய அரசு மாநில அரசுவுக்கு அனுமதி வழங்கியுள்ளார்.
திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள தாமிரபரணி கரையில் ஆய்வு செய்யவும் மாநில அரசுவுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.
அசாம் பல்கலைக்கழகம் தொல்பொருள் மற்றும் அருங்காட்சியகம் மூலமாக ராமநாதபுரம் மாவட்டம், ராமமேஸ்வரத்தில் உள்ள தீவுகளில் ஆய்வு செய்ய அனுமதி கிடைத்துள்ளது.
தமிழ்நாடு திறந்தவெளி பல்கலைக்கழகம் மூலமாக புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் தாலூகா பார்பனைகோட்டையிலும், மெட்ராஸ் பல்கலைக்கழகம் அகழ்வாராய்ச்சி மூலமாக வேலூர் மாவட்டம் குடியாத்தம் தாலூகா எம். வலசையில் அகழாய்வு செய்ய அனுமதி கிடைத்துள்ளது.
காரைக்குடி அழகப்பா பல்கலைகழக வரலாற்றுத்துறை மூலமாக சிவகங்கை மாவட்டம் காளையார் கோயில் தாலுகா, எலந்தகரையிலும், தமிழ் பல்கலைக்கழகம் சார்பில் கோயம்புத்தூர் மாவட்டம் மோலப்பாளையம் ஆகிய இடங்களில் அகழாய்வு செய்ய அனுமதி கிடைத்துள்ளது.
தேசிய கடல் சார் ஆராய்ச்சி நிறுவனம் சார்பாக தனுஷ்கோடி, இராமேஸ்வரம், சேது கால்வாய், ராமர் பாலம் சூழலின் தன்மை மற்றும் விரிவாக்கம் பற்றிய ஆய்வு, பாரம்பரிய கல்விக்கான ஷர்மா மையம் சார்பில் திருவள்ளுவர் மாவட்டம் அத்திரப்பாக்கம் தளத்தினை சுற்றி ஆய்வு செய்வது, தாமிரபரணி, வைகை, காவேரி ஆகிய நதிகளிலும் திருச்சிராப்பள்ளி, அரியலூர், நாகப்பட்டினம், கரூர், திருப்பூர், கோயம்புத்தூர், தஞ்சாவூர், திண்டுக்கல், புதுக்கோட்டை, மதுரை, தேனி, சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் தொல்லியல் தரவுகளை சேகரித்தல் பணி நடைபெற மாநில அரசுவுக்கு அனுமதி கிடைத்துள்ளது.
பழங்கால தளங்களான திருவள்ளுவர் மாவட்டம் சென்ராய பாளையம், திருவாரூர் மாவட்டம் குஞ்சிவம் பகுதியில் பாரம்பரிய கல்விக்கான ஷர்மா மையம் சார்பில் பழங்கால தொல்லியல் பொருள்களை பாதுகாத்தல் குறித்த ஆய்வுக்கும் மத்திய அரசு மாநில அரசுவுக்கு அனுமதி தந்துள்ளது.
மதுரை உயர் நீதி மன்றத்தில் மத்திய தொல்லியல் துறை மூலமாக வழங்கப்பட்ட பதில் மனு தமிழக தொல்லியல் ஆர்வலர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.


