மூடிக்கிடக்கும் செய்துங்கநல்லூர் சித்தா ஆஸ்பத்திரியை மினி கிளினிக்காக மாற்றவேண்டும் என்று பொதுமக்கள் கோரிககை விடுத்துள்ளனர்.
செய்துங்கநல்லூர் வளர்ந்து வரும் நகரமாகும். இவ்வூரில் சுற்றுபகுதியில் சுமார் 42 க்கு மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இங்கு சுமார் 2 லட்சத்துக்கு மேல் மக்கள் வசிக்கிறார்கள். இவர்கள் சந்தை, போஸ்ட் ஆபிஸ், மின் அலுவலகம், பஸ் நிலையம், ரயில் நிலையம், ஒன்றிய அலுவலகம் உள்பட முக்கிய தேவைக்கு செய்துங்கநல்லூர் வந்து செல்ல வேண்டியது உள்ளது. இங்கு பல தனியார் மருத்துவ மனை உள்ளது. ஆனால் ஏழை எளிய மக்கள் பயன்பெற செய்துங்கநல்லூரில் அரசு ஆஸ்பத்திரி வசதி கிடையாது. இந்த ஊரில் கடந்த 10 வருடங்களுக்கு முன்பு சித்தா மருந்தகம் ஒன்று இயங்கி வந்தது. இந்த மருந்தகத்தில் தினமும் மருத்துவர் வந்துசெல்வார். இப்பகுதி மக்கள் இந்த மருந்தகத்தினை பயன்படுத்தி வந்தனர். தற்போது மருந்தகம் மூடப்பட்டு விட்டது. இதனால் இப்பகுதி மக்கள் மிகவும் வேதனை அடைந்துள்ளனர். ஸ்ரீவைகுண்டம் எம்.எல்.ஏ சண்முகநாதன் ஏற்பாட்டின் பெயரில் செய்துங்கநல்லூருக்கு அம்மா மினி கிளினிக் அமையவுள்ளது. இந்த மினி கிளினிக்கை நல்லநிலையிலும், பயன்பாடு இல்லாமல் மூடிக்கிடக்கும் சித்தா மருத்துவமனையில் பயன்படுத்தினால் மக்களுக்கு மிக உதவியாக இருக்கும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து செய்துங்கநல்லூர் பஞ்சாயத்து தலைவர் பார்வதி நாதன் கூறும்போது, கடந்த 35 வருடங்களுக்கு முன்பு எங்கள் பகுதிக்கு சிறந்த ஆஸ்பத்திரியாக செய்துங்கநல்லூர் சித்தா மருத்துவ மனை இயங்கி வந்தது. கருங்குளம் ஆஸ்பத்திரி தரம் உயர்த்தப்பட்ட பின்பு அங்கு சித்தா பிரிவு இருந்த போதும்கூட செய்துங்கநல்லூரில் நோயாளிகள் மிக அதிகமாக இங்குள்ள சித்தா மருத்துவமனைக்கு வந்து சென்றனர். கருங்குளம் ஒன்றிய அலுவலகத்தின் கீழ் இயங்கி வந்த மருத்துவமனையில் பணியாற்றிய டாக்டர் பணி ஓய்வு பெற்ற பின்பு அதற்கு மாற்று டாக்டர் பணி அமர்த்தப்படவில்லை. மருந்தகர் ஒருவர் பணியாற்றி நோயாளிகளுக்கு மருந்து கொடுத்து வந்தார். அவர் பணி ஓய்வு பெற்றவுடன் ஆஸ்பத்திரியையே மூடி விட்டனர். இதனால் பொதுமக்கள் மிகவும் கஷ்டப்படுகிறார்கள். எனவே உடனடியாக செய்துங்கநல்லூர் சித்தா மருந்தகத்தினை அம்மா மினி கிளினிக்காக மாற்றி எம்,.எல். ஏ சண்முகநாதன்அவர்கள் திறக்கவேண்டும் என்று அவர் கூறினார்.
விரைவில் இந்த சித்த £ மருந்தகம் அம்மா மினிகிளினிக்காக மாற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
&&&
&&


