அம்மாவின் அரசை கலைக்க நினைக்கும் சவப்பெட்டிக்கு சம்மட்டி அடி கொடுங்கள் என அமைச்சர் மணி கண்டன் அதிரடியாக பேசினார்.
ஒட்டபிடாரம் தொகுதி கருங்குளம் ஒன்றியத்தில் அதிமுக வேட்பாளர் மோகனை ஆதரித்து அமைச்சர் மணிகண்டன் பிரச்சாரம் செய்தார். அவர் ஆழிகுடியில் பேசும் போது, அம்மாவின்அரசை கலைக்க நினைக்கும் சவப்பெட்டி காரர்களை சம்மட்டி வைத்து அடித்துவிரட்ட மோகனுக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களியுங்கள். ஒட்டபிடாரத்தில் பொறுப்பற்ற சுந்தரராஜன் எம்.எல்.ஏ வாக இருந்து பணத்துக்கு ஆசைப்பட்டு அம்மா ஆட்சியை கலைக்க முனைந்தார். இதனால் பதவி இழந்தார். அவரது சுயநலத்திற்காக கடந்த இரண்டு ஆண்டுகளாக ஒட்டப்பிடாரம் தொகுதி நலத்திட்டங்களை இழந்து தவிக்கிறது. இன்றைக்கு இந்த தொகுதி உள்ள மக்களுக்கு ஓ.ஏ.பி பணம் பெற வேண்டும் என்றாலும், விதவை பெண்களுக்கு பென்சன்வேண்டுமென்றாலும் , சமுதாய கூடம் கட்ட வேண்டும், ரேசன்கடை கட்டவேண்டும் என்றாலும் துடிப்பான ஒரு எம்.எல்.ஏ வேண்டும். அந்த தகுதி முழுவதும் கொண்டவர் மோகன் தான். எனவே அவரை ஆதரிக்க இரட்டைஇலை சின்னத்தில் வாக்களிக்க வேண்டுகிறேன். வறுமை கோட்டுக்கு கீழே இருக்கும் மக்களுக்கு 2 ஆயிரம் வழங்க அனைத்துகோப்புகளிலும் கையெழுத்திட்டார் முதல்வர். ஆனால் மு.க.ஸ்டாலின் வழக்கு மன்றத்தில் சென்று அதை மக்களுக்க தரவிடாமல் தடுத்து விட்டார். எனவே அவர்களை நம்பி விடாதீர்கள். அதுபோலவே திமுகவுடன் கூட்டணி சேர்ந்து அம்மாவின் அரசை கவிழ்க்கும் சவப்பெட்டிக்கு சம்மட்டி அடி கொடுக்க அதிமுகவை ஆதரியுங்கள் என்று அவர் பேசினார்.
வி.கோவில்பத்து, நாட்டார்குளம், விட்டிலாபுரம், முத்தாலங்குறிச்சி, அனவரதநல்லூர், ஆழிகுடி, முறப்பநாடு உள்பட பல இடங்களில் பிரச்சாரம் செய்தனர்.
அவருடன் வேட்பாளர் மோகன், கருங்குளம் ஒன்றிய செயலாளர் செங்கன், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் திருப்பாற்கடல், பொதுக்குழு உறுப்பினர் அய்யாத்துரை பாண்டியன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.