கடந்த தலைமுறையில் கிராமத்தினை விட்டு குடும்பத்தோடு சென்றவன் சந்திரன், எதிர்பாரதவிதமாக முத்துக்கிளியை மும்பையில் நடந்த விபத்தில் காப்பாற்றி கொரானா காலத்தில் காரில் ஊருக்குக் கூட்டி வருகிறார்.
விசாரித்ததில் இருவரும் ஒரே சமூகத்தினைச் சேர்ந்தவர்கள் எனத் தெரியவருகிறது. இந்த ஊர், இனம், முத்துக்கிளி சந்திரனுக்குப் பிடிக்கிறது. எனவே அவர்களுக்கு உதவிக் கொண்டே ஊரில் இருக்கிறான். ஆனால் இவரது குடும்பம் இரண்டு தலை முறையாக வேறு இனத்து பெண்ணை மணமுடித்துச் சென்று விட்டார்கள். “எனவே கலப்பினமாக நீ மாறி விட்டாய். உனக்குப் பெண் கிடைக்காது என்கிறார்கள்.கிராமத்தினை சேர்ந்தவர்கள் இவன் முத்துக்கிளியை கரம்பிடிக்க எடுக்கும் முயற்சியில் பல்வேறு பிரச்சனைகளை சந்திக்கிறான். தூத்துக்குடி மாவட்டத்தில் நடந்த மறக்க முடியாத சோகமான நினைவுகள் என பல அரிய தகவல்களை இந்த நாவல் தருகிறது. சந்திரன் தன் பூர்வீக வரலாற்றைத் தேடிச்செல்லும் போது பதிவு செய்யப்படாத தகவல்களை இந்த நாவலில் பதிவு செய்துள்ளார் நூலின் ஆசிரியர்


