இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி வெளியிட்ட செய்திக் குறிப்பு: மக்களவை மற்றும் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு, தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டிருந்த தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருந்ததால் கடந்த மார்ச் மாதம் முதல் வாரத்தில் இருந்து திங்கள்கிழமை தோறும் நடைபெறும் மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெறாமல் இருந்தது.
இந்நிலையில், நடத்தை விதிகள் முடிவுக்கு வந்துள்ளதால், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை (மே 27) காலை 11 மணி முதல் வழக்கம்போல குறைதீர் கூட்டம் நடைபெறும். மக்கள் தங்கள் கோரிக்கைகளை மனுவாக அளித்து பயன்பெறலாம் என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


