செய்துங்கநல்லூர் ஜோஸ் மெட்ரிக் பள்ளியில் குடியரசு தினவிழா நடந்தது. பள்ளி முதல்வர் ஜெய்தூன் பீவி தலைமை வகித்தார். ரகுமத் முன்னிலை வகித்தார் . நிர்வாகி ஓ.பி.முஸ்தபா தேசியகொடியேற்றி வைத்தார். பள்ளி மாணவ மாணவிகள் கலை நிகழ்ச்சி நடந்தது.
செய்துங்கநல்லூர் ஆர்.சி. நடுநிலைப்பள்ளியில் குடியரசு தினவிழா நடந்தது. இதில் மாணவர்கள் கொடியேற்றி இனிப்பு வழங்கினர். பள்ளி தலைமை ஆசிரியர் அமலா தலைமை வகித்தார்.மாணவி பிரியா கொடியை ஏற்றினார். பின் கலைநிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.