செய்துங்கநல்லூர் செக் போஸ்டில் மினி லாரியை நிறுத்தி விட்டு டிரைவர் தப்பி ஓடியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தற்போது தேர்தல் அறிவித்த காரணத்தினால் அனைத்து காவல் நிலைய செக்போஸ்டும் பரபரப்புடன் காணப்படுகிறது. வரும் வாகனங்களை சோதனை இடும் பணிதொடர்ந்து நடந்து வருகிறது. செய்துங்கநல்லூரில் இன்ஸ்பெக்டர் ரெகுராஜன் தலைமையில் சப் இன்ஸ்பெக்டர்கள் ராஜாராம், ராதாகிருஷ்ணன் தலைமை காவலர் பழனிசாமி மற்றும் போலிசார் காவல் செய்து வருகின்றனர். காலை 11 மணி அளவில் மினிலாரி ஒன்று ஸ்ரீவைகுண்டத்தில் இருந்து செய்துங்கநல்லூர் காவல் நிலையம் வழியாக வந்தது. இந்த லாரியில் ஏதோ லோடு ஏற்றப்பட்டிருந்தது. இதை சோதனை செய்ய வேண்டும் என்று போலிசார் லாரியை மறித்தனர். ஆனால் மினி லாரியை நிறுத்திய டிரைவர் வண்டி சாவியை எடுத்துக்கொண்டு ஓட்டம் பிடித்தார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சாவியை டிரைவர் எடுக்கும் போது லாரி லாக் ஆகி விட்டது. எனவே போலிசார் ராட்சத இயந்திரம்கொண்டு வந்து மினி லாரியை அகற்றினர்.
வண்டியில் தேர்தலுக்காக பணம் கடத்தியிருப்பார்களோ என பரபரப்பு ஏற்பட்டது. சோதனை செய்த போது உள்ளே ஆற்று மணல் இருந்து. ஆவணம் இல்லாமல் ஆற்று மணல் கடத்திய £ரி டிரைவர் ஓட்டம் பிடித்தது விசாரணையில் தெரிய வந்தது. இது குறித்து இன்ஸ்பெக்டர் ரகுராஜன் விசாரணை செய்து தப்பி ஓடிய லாரி டிரைவரை தேடி வருகிறார்.