உலகை ஆட்டிப்படைக்கும் கொரொனா வைரஸ் காரணமாக இந்தியாவில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த கோரோனா வைரஸின் அபாயத்தில் நாடே முடக்கப்பட்டுள்ள நிலையில் நமது ஊரை சார்ந்த பல்வேறு மக்கள் வேலைக்கு செல்ல முடியாமல் பொருளாதார நெருக்கடியால் கலக்கத்தில் உள்ளனர் இந்நிலையில் செய்துங்கநல்லூரில் வாழும் மாற்று மதத்தைச் சார்ந்தவர்களுக்கு
இஸ்லாமிய பைத்துல்மால் மூலமாக செய்துங்கநல்லூர் பஞ்சாயத்து துப்புரவு தொழிலாளர்கள் 10 குடும்பங்களுக்கு ரூபாய் 500 மதிப்பிலான மளிகை பொருட்கள் வழங்கி முடிந்த நிலையில் அடுத்த கட்டமாக மாற்று மதத்தைச் சார்ந்த 50 வயதிற்கு மேல் உள்ள 20 நபர்களுக்கு மூன்று வேளை உணவு வழங்க 28.3.2020 முதல் ஏற்பாடு செய்யப்பட்டு தினமும் 20 நபர்களுக்கு உணவு வழங்கப்பட்டு வருகிறது இதனை செயலாளர் நாஃகிப் தலைமையில் கௌரவ ஆலோசகர் சாகுல் ஹமிது முன்னிலையில் வாழங்கப்பட்டது