செய்துங்கநல்லூரில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி நடந்தது.
வட்டாச்சியர் சந்திரன் தலைமை வகித்தார். தேர்தல் துணை வட்டாச்சியர் பேச்சிமுத்து முன்னிலை வகித்தார். செய்துங்கநல்லூர் சேவியர் பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் ஆவுடையப்பன் பேரணியை துவக்கி வைத்தார்.
பேரணி கால்நடை ஆஸ்பத்திரியில் இருந்து துவங்கி செய்துங்கநல்லூர் முக்கிய வீதிகள் வழியாக பஸ் நிலையத்தினை வந்தடைந்தது. வருவாய் ஆய்வாளர் அய்யனார், அலுவலக கண்காணிப்பாளர் கணேசன், நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் ஆறுமுகசேகர், உடல்கல்வி இயக்குனர் ராகுல், விரிவுரையாளர்கள் சாகுல் அமீது, சுப்பிரமணியன், சன்னியாசி உள்பட பலர் கலந்து கொண்டனர்.