
செய்துங்கநல்லூரில் உள்ள வேளாண்மை விரிவாக்க மையத்தில் விவசாயிகளுக்கு பயிற்ச்சி நடந்தது.
வேளாண்மைத் துறையின் மாநில விரிவாக்க திடட்டங்களின் உறுதுணை சீரமைப்பு திட்டத்தின் கீழ் உயர் தர முறையில் காய்கறி உற்பத்தி முறைகள் குறித்து பயிற்சி நடந்தது. தூத்துக்குடி வேளாண்மை இணை இயக்குனர் முகைதீன் தலைமை வகித்தார். வேளாண்மை துணை இயக்குனர் ஜெயசெல்வின் இன்பராஜ் பயிற்சியை துவக்கி வைத்தார். கோடை உழவு செய்வதன் முக்கியத்துவம் , காய்கறி பயிரில் பூச்சி மற்றும் நோய் மேலாண்மை, காய்கறி சாகுபடி யில் தொழில் நுட்பங்கள் , தோட்டக்கலை துறையில் செயல்படும் திட்டங்கள் குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி நடந்தது. பயிற்சியில் வாகைகுளம் வேளாண்மை அறிவியல் மைய திட்ட ஒருங்கிணைப்பாளர் முத்துக்குமார், வாகைகுளம் வேளாண்மை அறிவியல் மைய பொட்சிறப்பறிஞர் வேல்முருகன், விளாத்திகுளம் தோட்டக்கலை உதவி இயக்குனர் உள்பட பலர் கலந்து கொண்டு பேசினர்.
கருங்குளம் தோட்டக்கலை அலுவலர் சுவேகா நன்றி கூறினார். பயிற்சிக்கான ஏற்பாடுகளை வட்டார தொழில் நுட்ப மேலாளர் ராஜலெட்சுமி, உதவி தொழில் நுட்ப மேலாளர்கள் மகேஸ்வரி, முத்து சங்கரி ஆகியோர் செய்திருந்தனர்.