செய்துங்கநல்லூரில் ஊரடங்கு சட்டத்தினை மீறிய 22 பேர் மீது வழக்கு பதிவு செய்து அவர்களது வாகனங்களை பறிமுதல் செய்து வருகின்றனர்.
ஸ்ரீவைகுண்டம் டிஎஸ்பி சுரேஷ்குமார் உத்தரவின் பேரில் செய்துங்கநல்லூர் போலிஸ் இன்ஸ்பெக்டர் ரெகு ராஜன் தலைமையில் சப் இன்ஸ்பெக்டர் சிலுவை அந்தோணி, முத்து கிருஷ்ணன், முருகன், இசக்கிபாண்டியன் உள்பட போலிஸ் குழுவினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். நெல்லை தூத்துக்குடி மாவட்டத்துக்கு இடைப்பட்ட பகுதி என்பதால் இவ்விடத்தில் போலீசார் செக்போஸ்ட் அமைத்து கண்காணித்து வருகின்றனர். ஆயினும் சிலர் முக கவசம் அணியாமல் அஜாக்கிரதையாகவும், கட்டுபாட்டை மீறி வாகனத்தில் சென்ற 22 பேர் மீது வழக்கு பதிவு செய்து அவர்கள் வாகனங்களை பறிமுதல் செய்து உள்ளனர்.
பாளை அரசு மருத்துவ மனையில் 23 பேருககு கொரானா தாககி அனுமதி பெற்றவர்களில் செய்துங்கநல்லூரை சேர்ந்தவரும் ஒருவர் எனவே 144 தடை உத்தரவை மீறி செய்துங்கநல்லூர் காவல் எல்கைக்கு நுழைபவர்கள் மீது வழக்கு பதிவு செய்ய தயராக காவலர்கள் உள்ளனர்.


