கருங்குளம் ஒன்றியத்தில் வல்லகுளம் பஞ்சாயத்து தலைவராக செந்தில் நாயகி வெற்றி பெற்றார். இவருடைய பதவியேற்பு நிகழ்ச்சி பஞ்சாயத்து அலுவலகத்தில் நடந்தது.
உதவி தேர்தல் அலுவலர் அகிலா என்ற ராமலட்சுமி பஞ்சாயத்து தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். கமலம் பஞ்சாயத்து தலைவராக பதவி ஏற்க அற்புதமணி, பார்வதி, சண்முக தாய், கோமதி, வேணி, பொன் இசக்கி, ஐயப்பன், ராமமூர்த்தி, லதா செல்வி ஆகியோர் பதவி ஏற்றனர்.
பஞ்சாயத்து கிளார்க் ஆனந்த பாரதி உள்பட பலர் கலந்துகொண்டனர்.


