முத்தாலங்குறிச்சி காமராசு அவர்கள் எழுதிய “செல்வங்களை அள்ளித்தரும் சித்தர் தரிசனம்” என்ற நூல் தென்காசி, நெல்லை, தூத்துக்குடி மாவட்ட 19 சித்தர்களின் வாழ்க்கை வரலாறு. சித்தர்களாகிய மகான்கள் மிகவும் எளிமையானவர்கள். அவர்கள் நிகழ்த்தி கொண்டிருக்கும் அற்புதங்கள் எண்ணிலடங்காதவை. தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகரியிலும், மியான்மர் நாட்டிலும், வணங்கப்படும் கட்டிக்குளம் சூட்டுக்கோல் மாயாண்டி சித்தர் நிகழ்த்திய அற்புதத்தால் ரயில் பயணத்தை தொடர முடியாமல் திணறியதும், அவர் மீண்டும் ரயிலில் ஏறி அமர்ந்த- உடன் ரயில் பிரயாணம் தடையின்றி தொடங்கியதையும் எளிமையான வடிவில் இருக்கும் மகான் நடத்திய அற்புதம் தான் என்பதை வாசிக்கும் மிகவும் மெய்சிலிர்க்கிறது.
ஒவ்வொரு சித்தருடைய அவதார தோற்றத்தை விவரித்து எழுதிய பின்னர், அவர் மகா சமாதி அடைவதற்கு முன்பும் தற்சமயமும் நிகழ்த்திகொண்டிருக்கும் அற்புதங்களையும் உயிரோட்டமாக ஆசிரியர் நம் கண் முன் காட்சிப்படுத்துகிறார்.
ஒவ்வொருவரும் நிகழ்த்திய அற்புதங்களை தெளிவாக விவரிக்கும் இடத்தில் நம்மையும் அறியாமல் பக்தி பரவசத்தில் லயித்து போவதைக் கண்கூடாக உணர முடிகிறது.
செல்வங்களை அள்ளித்தரும் சித்தர் தரிசனம் – முத்தாலங்குறிச்சி காமராசு


