தாமிரபரணி கரை சிவன் கோயில்கள் – சு.காளிமுத்து

150.00

Description

எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசுவுடன் இணைந்து பல மேடை நாடகங்கள் நடித்துள்ளேன். அவர் 1994 ல் எழுதிய முடிச்சு மேலே முடிச்சு என்ற நாடகத்தில் முடிச்சு முண்டாசு என்ற கதாபாத்திரத்தில் நடித்தேன். அது இன்றளவும் கிராமங்களில் என்னைப் பார்த்தவர்கள் என்னை முடிச்சு முண்டாசு என்று அழைப்பார்கள். இந்த அளவிற்கு மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்றுள்ளேன். முத்தாலங்குறிச்சி காமராசு அவர்களுடன் காரையாறு அணையில் இருந்து தாமிரபரணி ஆற்றின் இருபுற கரைகளில் உள்ள தீர்த்தக்கட்டங்களில் பயணம் செய்தேன்.

கோவில்கள், சிவ ஆலயங்கள், விஷ்ணு ஆலயங்கள் மற்றும் காவல் தெய்வங்கள் சப்த கன்னிகள் படித்துறைகள், தீர்த்த கட்டங்கள் இவைகளைப் பற்றி நான் அறிந்தேன். தாம்பரபரணி கரை ஓரத்தில் உள்ள கிராம மக்களை சந்தித்து அதன் வரலாறுகள் கதைகள் கேட்டு புத்தகம் எழுத இவருடன் நானும் உதவிக்குச் சென்றேன். இந்த சமயத்தில் அங்குள்ள நவகைலாயங்கள் அதன் வரலாறு அதன் சிறப்புகள், மகிமை, அற்புதங்கள், கோவிலைக் கட்டிய மன்னர்கள், வழிபாட்டு முறைகள் என சிவ ஆலயத்தில் உள்ள தனித்தனி சிறப்பம்சங்களைக் கேட்டு அறிந்தேன். தீர்த்த கட்டங்கள், அதன் சிறப்புகள், அதன் வரலாறுகள், வழிபாட்டு முறைகள் போன்றவற்றை நானும் அவருடன் சேர்ந்து பயணித்து தகவல்களை சேகரித்தேன். முத்தாலங்குறிச்சி காமராசு போல எனக்கு புத்தகம் எழுத வேண்டும் என்ற ஆசை வந்தது.

இதற்கிடையில் குடும்பச் சூழநிலை காரணமாக என்னால் நூல் எழுத இயலவில்லை. அவருடன் பயணித்த போது நான் செவி வழியாக கேட்ட தகவல்கள் என் மனதில் நீங்காமல் இருந்தது. இந்த சமயத்தில் முத்தாலங்குறிச்சி காமராசு என்னை சந்தித்து நீங்களும் புத்தகம் எழுதுங்க, நான் எழுதிய நூலைப் படியுங்கள். தொடர்ந்து புது தகவல்களைச் சேர்த்து புத்தகம் போடுங்கள் என்று என் ஆர்வத்தைத் தூண்டினார்.