குவைத்தில் மூன்று நாட்கள் – முத்தாலங்குறிச்சி காமராசு

250.00

Description

ஆரம்ப காலத்தில் மேடை நாடகம் எழுதி இயக்குவதிலும் நடிப்பதிலும் ஆர்வம் கொண்டேன். அதனைத் தொடர்ந்து திருநெல்வேலி வானொலியில் கதையும் நாடகத்தையும் எழுதி வந்தேன்.

பின்னர் தாமிரபரணியை பற்றி அறிந்து வரலாற்று தகவல்களை திரட்டி எழுதியதால் தாமிரபரணி எழுத்தாளராகி விட்டேன். ஆனாலும் கூட நாவல் எழுத வேண்டும் என்ற ஆசை என் மனதுக்குள் எப்போதும் இருந்து கொண்டே இருந்தது.

தற்போது முத்து கிளி, கிளாச்சிட்டு, தீதும் நன்றே, கள்ளிக்காட்டு கள்ளவாண்டன் என தொடர்ந்து நாவல்கள் வெளிவந்து கொண்டே இருக்கிறது. பொருளை ஆற்றில் புதைந்த ரகசியங்கள், ஆட்சி சொன்ன ஆத்தோர கதைகள், தாமிரபரணியே எங்கள் தாமிரபரணியே போன்ற தொடர்கள் நெல்லை டைம்ஸ் பத்திரிக்கையில் எழுதியது முதல் முதலாக குவைத் நாட்டிற்குச் சென்று வந்த பயண அனுபவத்தை வைத்து குவைத்தில் மூன்று நாட்கள் என்ற தலைப்பில் தமிழ் டைம்ஸ் பத்திரிக்கையில் தொடராக எழுதினேன்.

இத்தொடர் எழுத உதவிய பத்திரிக்கை நிறுவனர் முன்பொறுப்பாசிரியர் தம்பான் அவர்களுக்கு நன்றி. என்னை குவைத் நாட்டிற்கு அழைத்துச் செல்ல முக்கிய காரணமாக இருந்த முனைவர் சுதாகர் அவர்களுக்கும், குவைத் தமிழ்நாடு பொறியாளர்கள் சங்க தலைவர் ஜெகன் நகர் அவர்களுக்கும், செயலாளர் அசோக் அவர்களுக்கும், பொருளாளர் சுப்பிரமணியன் அவர்களுக்கும், தொழில் அதிபர் பலவேசமுத்து ஐயா அவர்களுக்கும், சங்க உறுப்பினர்கள் அனைவருக்கும் மிக்க நன்றி.