பாண்டிய நாட்டு திருப்பதி – சு.காளிமுத்து

200.00

Description

எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு அவர்கள் தாமிரபரணி கரையில் உள்ள கோவில்களின் தல வரலாறு எழுதுவதற்கு பல கோயிலுக்குச் சென்று விவரங்களை சேகரித்தார். இதில் நானும் அவருடன் பயணிக்க வாய்ப்பு கிடைத்தது. அவர் பல நூல்களை எழுதி வெளியிட்டுள்ளார். அவர் வழிகாட்டுதலில் தான் எனது முதல் நூல் வெளிவந்தது. தற்போது இரண்டாவது நூலுக்கும் அவரே உற்சாகம் கொடுத்தார்.

நான் சேகரித்து வைத்த நவதிருப்பதி ஸ்தலங்கள் வரலாறு மற்றும் அரிய பெரிய தகவல்களை பொன்சொர்ண பதிப்பகத்தில் கொண்டு சேர்த்தேன். அன்புத் தம்பி சுடலைமணி செல்வன் மூலம் கணினி தட்டச்சு செய்து உதவினார். அவருக்கு என்னுடைய மனமார்ந்த நன்றி. பொன்சொர்ணா பதிப்பக உரிமையாளர் முனைவர் கா.அபிஷ் விக்னேஷ் இந்த புத்தகத்தினை பதிப்பித்தார். அவருக்கும் மிக்க நன்றி.

தமிழ்நாட்டில் 108 வைணவ திரு தேசங்கள் உள்ளன திருத்தலங்கள் உள்ளன . இதில் பாண்டி நாட்டு திருப்பதி 11 உள்ளது. நவத்திருப்பதி 9 ம் தாமிரபரணி ஆற்றங்கரையில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ளது. திருக்குறுங்குடியும் , நான்குநேரியும் நெல்லை மாவட்டத்தில் உள்ளது.