Description
ஒருங்கிணைந்த நெல்லை மாவட்டம் என்றாலே நமக்கு நெல்லை, தூத்துக்குடி மாவட்டஙங்கள் இரண்டும் தான் நினைவுக்கு வரும். தூத்துக்குடி மாவட்டம் பிரிந்தாலும் கூட அறிஞர்களால் மனதளவில் இந்த மாவட்டங்களைப் பிரிக்க முடியவில்லை. காவ்யா சண்முகசுந்தரம் அய்யா என்னிடம் நெல்லைத் துறைமுகங்கள் பற்றி எழுதுங்கள் என்று சொல்லும்போதே பிரியாத நெல்லை மாவட்டம் பற்றிதான் என்று அழுத்திக் கூறினார்கள்.
அதற்காக நான் பல்வேறு கட்டங்களில் உவரி, மணப்பாடு, குலசேகரன்பட்டினம், காயல்பட்டினம் நகருக்குச் சென்றேன்.
இந்த நூலில் 2500 வருடங்களுக்கு முன்பு இருந்த கொற்கையில் இருந்து தற்போது உள்ள தூத்துக்குடி துறைமுகம் வரை தகவல்களை கவனமாக திரட்டினேன்.






