Description
“வரலாறு முக்கியம் அரசே” என்று சொல்வதுபோல வரலாறு கலந்த சுவராஸ்யமான கதையை தொடர எழுதுங்கள் என நெல்லை டைம்ஸ் பொறுப்பாசிரியர் தம்பான் என்னிடம் கேட்டார். ஆகவே தான் “ஆச்சி சொன்ன ஆத்தோரக் கதை” உருவானது.
தாமிரபரணி கரை வரலாற்றை சொல்வதாகவே அமையட்டும் என அவர் கூறியிருந்தார். எனவே தான் தாமிரபரணி கரை சம்பந்தப்பட்ட வரலாறுகளை கூறும் கதைகளை ஒன்று சேர்த்தேன். ஆச்சி கதை சொல்வதாக இந்த கதையை அமைத்தோம்.
நெல்லை மொழியில் கதை சொன்னால் எப்படியிருக்கும் என கற்பனை செய்தோம். முதலில் “தாமிரபரணி கதைகள்” என்று தான் பெயர் சூட்டினோம். ஆனால் படம் வரைய வந்த நண்பர் ஓவியர் வள்ளி நாயகம் தான் “ஆச்சி சொன்ன ஆத்தோரக் கதைகள்” என இந்த நூலுக்கு பெயர் சூட்டினார்கள்.
இந்த கதைகளில் சில என் ஆச்சி பார்வதியம்மாள் எனக்குச் சொன்ன உண்மை கதைகள் தான். மற்ற கதைகள் பிற்காலத்தில் நான் களப்பணிக்கும் ஒவ்வொரு ஊராக சென்றபோது எனக்கு அங்குள்ள பாட்டிகளும் தாத்தாக்களும் சொன்ன கதைகள். இதையெல்லாம் உங்களிடம் சொல்வதில் பெருமை கொள்கிறேன்.






