முத்தாலங்குறிச்சி காமராசு எழுதிய நெல்லை வரலாற்றுச் சுவடுகள்[amazon kindle book] என்ற நூல் வேண்டுவோர். கீழ்கண்ட லிங்கில் சென்று ஆடர் செய்ய வேண்டுகிறோம். அதில் சென்று தாங்கள் பணம் செலுத்தி உங்கள் விலாகத்தினை பதிவிட்டால் உங்களை தேடி நூல் வந்து சேரும்.தூத்துக்குடி மாவட்டம் புன்னக்காயலில் தாமிரபரணி 6 பிரிவுகளாக பிரிந்து வங்காள விரிகுடா கடலில் கலக்கிறது. இந்த 6 பிரிவுகளாக ஓடும் ஆற்றின் நடுவில் புனித தோமையார் ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்துக்கு படகில் தான் செல்ல வேண்டும். ஆனால், புன்னக்காயலை சேர்ந்த ரமணி என்ற பெண்ணோ தன்னந்தனியாக 6 ஆறுகளையும் தண்ணீரில் நடந்தே கடந்து ஆலயத்தில் தீபம் ஏற்றுகிறார். ஆலயத்துக்கு இவர் செல்லும்போது முட்டளவு ஆழம் இருக்கும். ஆனால், திரும்பி வரும்போது ஆளை மூழ்கடிக்கும் அளவுக்கு ஆழம் அதிகரிக்கும். கடலின் சீற்றத்துக்கு ஏற்றார் போல் தண்ணீரின் அளவு அதிகரிப்பதே இதற்கு காரணம். இருந்த போதும் நிலவு மற்றும் சூரியனை அளவீடாக வைத்து ரமணி தன்னந்தனியாக ஆற்றை கடக்கிறார். இந்த புனிதப் பணிக்காக அவர் திருமணமே செய்து கொள்ளவில்லை.இது போன்ற பல செய்திகளை கொண்டது.https://www.amazon.in/-ebook/dp/


