கீழசெக்காரகுடியில் காசநோயாளிகளுக்கான மாதாந்திர கூட்டம் நடந்தது.
கருங்குளம் வட்டார அளவிலான காசநோயாளிகள் மற்றும் மருந்து அளிப்பவர்களுக்கான மாதாந்திர கூட்டம் கீழசெக்காரகுடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடந்தது. முதன்மை குடிமை மருத்துவ அலுவலவர் டாக்டர்.பன்னீர் செல்வம் தலைமை வகித்தார். செவிலியர் நிவேதா வரவேற்றார். முதன்மை குடிமை மருத்துவ அலுவலர் டாக்டர்.பன்னீர் செல்வம் காசநோய்க்கான அறிகுறிகள், பரவும் முறை ஆகியவற்றை பற்றி விரிவாக எடுத்துரைத்து விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கினார்.
மருத்துவ பணியாளர் மாரியம்மாள் நன்றி கூறினார்.