கருங்குளத்தில் நெல்லை மாவட்டத்தினை சேர்ந்த 5 கல்வி மாவட்ட சாரணர் ஆசிரியர்களுக்கான மலை ஏற்றம் பயிற்சி நடந்தது.
இந்த பயிற்சியில் ஒருங்கிணைந்த நெல்லை மாவட்டத்தில் சங்கரன் கோயில், வள்ளியூர், திருநெல்வேலி, தென்காசி, சேரன்மகாதேவி ஆகிய 5 கல்வி மாவட்டத்தினை சேர்ந்த சாரண சாரணிய ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.
இவர்களுக்கு பல பயிற்சிகள் அளிக்கப்பட்டது. மலை ஏற்றத்திற்கான பயிற்சியும் அளிக்கப்பட்டது. மலைவளம் குறித்து எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு பேசினார். சாரண ஆசிரியர்கள் கருங்குளம் வகுளகிரி மலையில் அடிவாரத்தில் இருந்து கரடுமுரடான பாதை வழியாக ஏறி மலை உச்சிக்கு வந்தனர். அவர்களை சாரணர் பயிற்சி முகாம் தலைவர் அதிசய ராஜ் குமரப்பன், டைட்டஸ் ஜான் போஸ்கோ, முகம்மது கமாக், சகாய மேரி, கோதர் பாட்ஷா, சக்தி, பெருமாள், சண்முகம், ஜெயா சண்முகம் உள்பட பலர் பயிற்சியை நடத்தினர். இதில் சுமார் 80 ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.