சாத்தான்குளம் முன்னாள் எம்.எல்.ஏ ராணி வெங்கடேசன். இவர் கடந்த முறை காங்கிரஸ் சார்பில் ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.
கொரோனா பணியில் சிறப்பாக செயல்பட்டு வரும் சுகாதர துறை இயக்குனர் பீலா ராஜேஷ் அவர்களின் தாயார் ராணி வெங்கடேசன். இவர் கருங்குளம் ஒன்றியத்துக்குட்பட்ட நலிவடைந்த காங்கிரஸ் பிரமுகர்களுக்கு உதவி செய்தார். கோரோனாவினால் பாதிப்படைந்த சுமார் 35 பேருககு 10 கிலோ அரிசி, துவரம்பருப்பு, தேவையான மளிகை சாமான்கள் அடங்கிய பையை அவர்களுக்கு அளித்தார். கருங்குளத்தில் வைத்து நடந்த நிகழ்ச்சிக்கு கருங்குளம் வட்டார காங்கிரஸ் தலைவர் ஆறுமுகம் தலைமை வகித்தார்.
தூத்துக்குடி தெற்கு மா£வட்ட முதன்மை காங்கிரஸ் செயலாளர் பார்த்தசாரதி முன்னிலை வகித்தார். தூத்துக்குடி தெற்கு மாவட்ட காங்கிரஸ் துணை தலைவர் கிருஷ்ண கோனார் பொருள்களை ராணி வெங்கடேசன் சார்பில் வழங்கினார்.


