
ஆறாம்பண்னை அரபாத் நகர் ஆற்று படுகையில் மணல் அள்ளிய குட்டி யானையை மடக்கி பிடித்து தாசில்தாரிடம் ஒப்படைத்த இளைஞர்களை பொதுமக்கள் பாராட்டினர்.
தாமிரபரணி ஆற்றங்கரையில் மணல் கடத்துவதுவாடிக்கையாக உள்ளது. இரவு நேரங்களில் மணல் மூட்டையில் ஆற்று மணலை அள்ளி வைத்து அதை கரையில் கொண்டு வந்து குட்டியானையில் ஏற்றி செல்வதை பலர் வாடிக்கையாக வைத்திருக்கின்றனர். இதே போல் நேற்று அதிகாலை 5 மணி அளவில் குட்டியானை ஒன்றில் மணல் மூட்டைகளை கொங்கராயகுறிச்சி சுடலை மகன் மகராஜன்(28). கள்ளதானமாக ஏற்றிகொண்டிருந்தார். இது குறித்து அரபாத் நகர் இஸ்லாமியர் இளைஞர் அணியினர் தாசில்தாருக்கு தகவல் அளித்துவிட்டு, மினிலாரியை மடக்கி பிடித்தனர்.
ஸ்ரீவைகுண்டம் தாசில் தார் சந்திரன், முதுநிலை வருவாய் ஆய்வாளர் அய்யனார் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து மணல் மூட்டையுடன் மினி லாரியை முறப்பநாடு போலிசில் ஒப்படைத்தனர். தாசில்தார் சந்திரன் கொடுத்த புகார் மீது முறப்பநாடு போலிசார் வழக்கு பதிவு செய்து மகராஜனை கைது செய்தனர்.
மணல் திருடர்களை பிடித்து கொடுத்த இளைஞர்களை பொதுமக்கள் பாராட்டினர்.