ஆறாம்பண்ணை கிராமத்தில் திமுக சார்பில் கிராம சபை கூட்டம் நடந்தது.
இதில் கனிமொழி எம்.பி கலந்துகொண்டு மக்கள் குறை கேட்டார். ஊராட்சி செயலாளர் இமாம் அலி தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர் நல்லமுத்து, முன்னிலை வகித்தனர். அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ வரவேற்றார். ஆறாம்பண்ணைக்கு நூலக கட்டிடம் வேண்டும். கருங்குளம் ஆற்று பாலம் வழியாக ஆறாம்பண்ணைக்கு புதிய வழித்தடத்தில் பஸ் இயக்க வேண்டும். ரேசன் கடை கட்டிடம்வேண்டும், கால்நடை மருத்துவமனை புதிக கட்டிடம் வேண்டும். குடிதண்ணீர் பிரச்சனை போக்க புதிதாக தாமிரபரணி ஆற்றில் உரை கிணறு அமைக்க வேண்டும், என்பது உள்பட பல கோரிக்கையை பொதுமக்கள் வைத்தனர்.
அதன் பின் கனிமொழி எம்பி பேசிய போது, அதிமுக அரசு பிஜேபி யிடம் அடிமையாகி விட்டது. ஒரு அடிமை எப்படி மக்களை காப்பாற்ற முடியும். எனவே மத்தியில் உள்ள பி.ஜே.பியை தூக்கி பிடிக்கவே அதிமுக ஆசைப்படுகிறது. எனவே பி.ஜே.பியை அகற்றும் பணியில் நாம் ஈடுபடவேண்டும். பெண்கள் இந்த ஆட்சியில் நிம்மதியாக இருக்க முடியவில்லை. அதற்கு பொள்ளாச்சி சம்பவமமே சாட்சி. எனவே பெண்கள் நலன் பெற இந்த ஆட்சி அகற்றபடவேண்டிய ஆட்சியாக உள்ளது. ஆறாம்பண்ணை நூலகத்தில் படிக்க பல மாணவர்கள் வந்து செல்வதாக அறிந்தேன். படிப்பதற்கு ஆர்வம் காட்டும் அவர்கள் கோரிக்கையை ஏற்று அவர்களுக்கு கூடுதல் கட்டிடம் கட்டி தர எனது நிதியில் ஓதுக்கீடு செய்வேன். மற்ற திட்டங்களும் திமுக கூட்டணி வெற்றி பெற்றவுடன படிப்படியாக செய்து தரப்படும் என பேசினார்.
அவருடன் உமரிசங்கர், வழக்கறிஞர் ஆறுமுகபெருமாள், பார்த்தீபன், இலுப்பைகுளம் கணேசன், சேக்அப்துல்காதர். உள்பட பலர் கலந்துகொண்டனர்.