வல்லநாடு பாரதி பள்ளியில் சித்த மருத்துவ விழிப்புணர்வு கண்காட்சி மற்றும் பேரணி நடந்தது.
வல்லநாடு பாரதி மழலையர் துவக்கப்பள்ளி நிறுவனர் பாரதி சங்கரலிங்கம் தலைமை வகித்தார். பள்ளி தலைமை ஆசிரியை ரத்னா சங்கரலிங்கம் முன்னிலை வகித்தார். ஆசிரியை தம்பிராட்டி வரவேற்றார். வல்லநாடு ஆரம்ப சுகாதார நிலைய சித்த மருத்துவ அலுவலர் செல்வகுமார் பாரம்பரிய உணவு வகைகள் பயன்படுத்துல், தன் சுத்தம் பேணுதல் உடற்பயிற்சி அவசியம், சத்துணவு பயன்படுத்துதல், சரிவிகித உணவு முறைகள், காலையில் இஞ்சி பகலில் சுக்கு மாலையில் கடுக்காய் பயன்படுத்தலின் அவசியம், நோய் இல்லாமல் வாழ சித்தர்கள் காட்டிய மருத்துவ வழிகள் குறித்து பயிற்சி நடந்தினார். சித்த மருத்துவ தொடர்பான் படக்காட்சி, கண்காட்சி நடந்தது. ஆசிரியை கலா நன்றி கூறினார். நிகழ்ச்சி ஏற்பாடுகளை சித்த மருத்துவ உதவியாளர் மாரியப்பன் செய்திருந்தார்.


