டவுண் மந்திர மூர்த்தி மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் 9 வது மற்றும் 10 வது வகுப்பு மாணவர்கள் ஆதிச்சநல்லூர் பகுதியை பார்வையிட்டனர்.
உலக நாகரீகத்தின் தொட்டில் என போற்றப்படும் ஆதிச்சநல்லூர் தற்போது மக்கள் மத்தியில் பிரபலமாகி வருகிறது. புளோரிடா ஆய்வு மையத்தின் மூலம் இங்கு கிடைத்த முதுமக்கள் தாழி கிருஸ்து பிறப்புக்கு 900 ஆண்டு முந்தையது என கார்பன் டேட்டிங் செய்து மதுரை ஐகோர்டில் அறிவித்த பின் இதன் மதிப்பு மேலும் கூடியது. எனவே பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவிகள் மிக அதிகமானவர் இங்கு வந்து ஆய்வு செய்து வருகின்றனர்.
டவுண் ஸ்ரீ மந்திர மூர்த்தி மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த அருப்பேராற்றல் அருட் தமிழ் மன்றம் சர்பில் 40 மாணவர்கள் கிருஷ்ணாபுரம் கலை சிற்பங்கள், ஆதிச்சநல்லூர் பரம்பு, பாளையங்கோட்டை அருங்காட்சியகம் போன்ற இடங்களுக்கு வந்து பார்வையிட்டனர். ஆதிச்சநல்லூர் பரம்பில் எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு ஆய்வுகள் குறித்து எடுத்துரைத்தார். பாளையங்கோட்டை அருங்காட்சியகத்தில் காப்பாட்சியர் சிவசத்தியவள்ளி விளக்க மளித்தார். இந்த நிகழ்ச்சியில் வரலாற்று ஆசிரியர் சுந்தர சிவம், தமிழாசிரியர் சுபா, அறிவியல் ஆசிரியர் ஸ்டாலின் ஆகியோர் கலந்துகொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை டவுண் ஸ்ரீ மந்திரமூர்த்தி மேல்நிலைப்பள்ளி அருப்பேராற்றல் அருட் தமிழ் மன்றம் செய்திருந்தது.


