இன்று காலை தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் சார்பில் நடைபெறவுள்ள பாரம்பரிய நடைபயணத்திற்கான முன்னேற்பாடுகளைக் காண மாவட்ட ஆட்சியர் விசு மகாஜன் வருகை புரிந்தார். அவரை ஆலிக்கன் ஆலயம், ஆஷ் நினைவு மண்டபம், சின்னக்கோயில், சேவியர் பள்ளி, பழைய நகராட்சி அலுவலகம் ஆகிய இடங்களுக்கு நானும், எழுத்தாளர் நெய்தல் ஆண்டோ அவர்களும் அழைத்துச் சென்று விவரங்களை எடுத்துரைத்தோம். எங்களோடு மாநகராட்சி ஆணையர் பிரியங்கா மேடமும், பயிற்சி ஆட்சியர் கிருஷ்ணா படேல் அவர்களும், அலுவலர்களும் உடன் வந்தனர். தொடர்ந்து இதற்கான பணிகள் ஆணையர் திருமதி பிரியங்கா தலைமையில் நடைபெறுகின்றன.
– முத்தாலங்குறிச்சி காமராசு


