பிறந்த நாள் விழாவை முன்னிட்டு குரூஸ் பர்னாந்து அவர்கள் படித்த புனித பிரான்சிஸ் சவேரியார் பள்ளியின் வளாகத்தில் வைத்து காலையில் பேச்சுப்போட்டி நடந்தது. 6 முதல் 12 வகுப்பு வரையிலுள்ள மாணவ – மாணவியர்க்கு மூன்று பிரிவாகப் போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் ஏறத்தாழ 160 மாணவ – மாணவியர் பங்கேற்றனர். போட்டியில் வென்றோருக்கு முதல் பரிசு ரூ 5000, இரண்டாம் பரிசாக ரூ 3000, மூன்றாம் பரிசாக ரூ2000 என மொத்தம் முப்பதாயிரம் ரூபாய் பரிசுத் தொகை வழங்கப்பட்டது.
இந்நிகழ்வுக்குத் தலைமை தாங்கி போட்டியினை அஜிதா ஆக்னல் தொடங்கி வைத்தார். பள்ளியின் தலைமையாசிரியர் அ ருள்திரு. அமல்ராஜ் சே.ச. ஆசியுரை வழங்கினார்.
மெரிண்டோ வில்லவராயர், துறைமுகம் புளோரன்ஸ், டேனியல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
போட்டியில் கலந்து கொண்ட அனைத்து மாணவ – மாணவியர்களுக்கான அன்பின் விருந்தினை அந்தோணிசாமி தொடங்கி வைத்தார்.
பிற்பகல் நடந்த இரண்டாவது அமர்வில் இரண்டு நூல்கள் வெளியிடப்பட்டன . இந்நிகழ்வுக்குப் பள்ளியின் தாளாளர் முனைவர் பிரான்சிஸ் சேவியர் சே.ச. ஆசியுரை வழங்கினார். முனைவர் பெர்க்மான்ஸ் குணவதி பெர்னாண்டஸ் தலைமை வகித்தார்.
வீரபாண்டியன் பட்டணம் ஊர்த் தலைவர் பெயிட்டன் ராயன், பரதவர் அரசியல் எழுச்சிப் போராளிகள் அமைப்பின் தலைவர் கனிட் ராஜ், காங்கிரஸ் கட்சியின் புல்டன் ஜெசின் ஆகியோர் முன்னிலை வைத்தனர்.
ஆசிரியர் யூஜின் குரூஸ் பர்னாந்து பற்றிய பாடலை எழுதிப் பாடியதோடு,
வெனான்சியுஸ் ரொட்ரிக்ஸின் முப்பெரும் பார்வை நூலை வெளியிட, ஆசிரியர் எட்வின் சார்லஸ் நூலைப் பெற்றுக்கொள்ள, பேராசிரியர் முனைவர் ஜாக்சன் நூலை அறிமுகம் செய்து பேசினார்.
ஆசிரியை பனிமய சுகந்தியின் ஒளிரட்டும் வாழ்வு நூலை மூத்த எழுத்தாளர் கலாபன் வாஸ் வெளியிட, ஓய்வு பெற்ற ஆசிரியர் ஜெயபால் பெற்றுக்கொள்ள, பிரபாவதி நூலை அறிமுகம் செய்து பேசினார்.
பேச்சுப் போட்டியை நடத்திக் கொடுத்த இருபது நடுவர்களும் சிறப்புச் செய்யப்பட்டனர்.
மாலையில் நடந்த மூன்றாவது அமர்வுக்குக்
கென்னடி பர்னாண்டெஸ் தலைமை தாங்கினார்.
தமிழ்ச்செம்மல் முத்தாலங்குறிச்சி காமராசு, மருத்துவர் முகம்மது நஸிர், நவரோஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்நிகழ்வில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் துணைத்தலைவர் ஏ.பி.சி. வி.சண்முகம் சிறப்புரையாற்றினார் .
தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் சி. ப்ரியங்கா இ.ஆ.ப.
சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு போட்டியில் வெற்றி பெற்றோருக்குப் பரிசுத் தொகையும், பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழும் ஆறுதல் பரிசும் வழங்கினார்.
முன்னதாக நிகழ்ச்சிக்கு வந்தோரை ஆசிரியர் சாக்ரோ வரவேற்றார். நிகழ்ச்சியைக் காஸ்ட்ரோ தொகுத்து வழங்கினார். நெய்தல் எழுத்தாளர்கள் வாசகர்கள் சங்கத்தின் சார்பில் விழாவுக்கான ஏற்பாடுகளைச் செய்த ஆசிரியர் தமிழ்ச்செம்மல் நெய்தல் அண்டோ நன்றியுரை கூறினார்.
இந்நிகழ்வில் ஆலந்தலை, வீரபாண்டியன் பட்டணம், புன்னைக்காயல், பழையகாயல், சிப்பிகுளம், கீழவைப்பார் உள்ளிட்ட கடலோர ஊர்களைச் சார்ந்த மாணவ மாணவியரும், தூத்துக்குடி மாநகரத்தின் பல பள்ளிகளில் இருந்து ஏறத்தாழ 160 க்கும் மேற்பட்ட மாணவ- மாணவியரும் அவர்களின் பெற்றோரும் ஆசிரியர்களும் பொது மக்களும் விழாவில் கலந்து சிறப்பித்தனர்.


