கருங்குளத்தில் தாமிரபரணி நதிக்கு பிறந்த நாள் பூஜையை முன்னிட்டு பொதுமக்கள் தாமிரபரணியை காக்க உறுதிமொழி எடுக்கப்பட்டது.
தாமிரபரணி நதி வற்றாத ஜீவ நதி. ஒரே மாவட்டத்தில் ஓட கூடிய நதி. பல கோடி லிட்டர் தண்ணீரை தினமும் நெல்லை , தூத்துக்குடி விருதுநகர் மாவட்டத்துக்கு தரக்கூடியது. தாகத்தினை போக்கும் நதிக்கு தாமிரபரணி மகாத்மியம் படி வைகாசி விசாகம் அன்று தான் பிறந்த நாள் விழா என கூறுகிறார்கள். அகத்திய பெருமான் இன்றுதான் தாமிரபரணியை உருவாக்கினார் என்று கூறப்படுகிறது. எனவே இதற்கான கருங்குளம் தாமிரபரணி ஆற்றில் இன்று பிறந்த நாள் விழா தாமிரபரணி நல இயக்கம் சார்பில் கொண்டாடப்பட்டது.
செய்துங்கநல்லூர் வாசகர் வட் தலைவர் திருமலை நம்பி தலைமை வகித்தார். மணக்கரை போஸ்டர் மாஸ்டர் காளிமுத்து, ஆறாம்பண்ணை சேக் அப்துல் காதர் ஆகியோர் முன்னிலை வகித்தார். தாமிரபரணிக்கு பூ தூவி சுலோகம் கூறினார். அதன்பின் தாமிரபரணி ஆற்றினை பாதுகாக்க உறுதி மொழி எடுக்கப்பட்டது.
இதுகுறித்து காளிமுத்து கூறும் போது, தொடர்ந்து 20 வருடகாலமாக நாங்கள் வடமொழி நூலான தாமிரபரணி மகாத்மியம் கூறியபடி வைகாசிவிசாகம் அன்று தாமிரபரணிக்கு பிறந்த நாள் விழா நடத்தி வருகிறோம். இதுவொரு விழிப்புணர்வு விழா. நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர் மாவட்டத்துக்கு தொடர்ந்து குடிதண்ணீர் தருவது தாமிரபரணி தான். ஆனால் இந்தநதி தற்போது சுரண்டப்பட்டு, சாக்கடை கலக்கப்பட்டு உயிர்காக்கும் நதி, உயிர் போக்கும் நதியாக மாறி வருகிறது. இதற்கு காரணம் பொதுமக்களிடம் விழிப்புணர்வு இல்லாததே. எனவே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வண்ணம் இந்த பிறந்த நாள் விழாவை விழிப்புணர்வு விழாவாக கொண்டாடுகிறோம் என்றார்.
நிகழ்ச்சியில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைகழக மாணவர் அபிஷ்விக்னேஷ் எழுதி இயக்கிய தாமிரபரணிக்கு நாம் தரும் பரிசு என் ற ஆவணபடம்வெளியிடப்பட்டது. பட்டிமன்றபேச்சாளர் முத்தமிழ் படத்தினை வெளியிட்டார்.
நிகழச்சியில் எழுத்தாளர் முத்தாலங்குறிச்சிகாமராசு , ரவிராஜ், கண்ணன், நாகராஜபெருமாள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.


