வ.உ.சி. கல்லூரியின் பவள விழா மற்றும் தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியின் 105-வது நிறுவன தின விழாவில் பங்கேற்பதற்காக குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் தூத்துக்குடி வருவை தர உள்ளார்.
தூத்துக்குடியில் வ.உ.சி. கல்லூரியின் பவள விழா மற்றும் தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியின் 105-வது நிறுவன தின விழாவில் பங்பேற்பதற்காக குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் வருகையை முன்னிட்டு பாதுகாப்பு முன்னேற்பாடுகளை மாவட்ட ஆட்சியர் விஷூ மகாஜன் நேரில் ஆய்வு செய்தார்.
வரும் 11.11.2026 அன்று தூத்துக்குடிக்கு வருகை தரும் இந்தியாவின் குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் கலந்துகொள்ளும் விழா ஏற்பாடுகளை மாவட்ட ஆட்சியர் விஷூ மகாஜன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்தியாவின் குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் வருகின்ற 11.11.2026 அன்று தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் கல்லூரியின் பவள விழா மற்றும் தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியின் 105-வது நிறுவன விழா ஆகிய முக்கிய நிகழ்ச்சிகளில் அவர் கலந்துகொண்டு சிறப்பிக்கவுள்ளார்.
குடியரசு துணைத் தலைவரின் வருகையை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்டு வரும் பாதுகாப்பு மற்றும் முன்னேற்பாடு பணிகளை மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன், இன்று (07.11.2026) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
தூத்துக்குடி வ.உ.சி. கல்லூரி பவள விழாவை முன்னிட்டு நடைபெறும் முன்னாள் மாணவர் சந்திப்பு நிகழ்ச்சியிலும், தூத்துக்குடி மாணிக்கம் மகாலில் நடைபெறும் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் 105-வது நிறுவன தின விழாவிலும் அவர் பங்கேற்கிறார்.
இந்த ஆய்வின்போது, தூத்துக்குடி மாநகராட்சி ஆணையாளர் சி.ப்ரியங்கா, நிர்வாக தலைவர் அசோக்குமார், துணைத் தலைவர் லட்சுமி பிரகாஷ், வ.உ.சி. கல்லூரி முதல்வர் வீரபாகு மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.


