தூத்துக்குடி நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள வேலவன் ஹைப்பர் மார்க்கெட்டில் மளிகை, காய்கறி, ஜவுளி, வீட்டு உபயோகப் பொருட்கள் மற்றும் பிரத்யேகத் தங்க நகை பிரிவு ஒரே கூரையின் கீழ் இயங்கி வருகின்றன.
தூத்துக்குடி மக்களின் தினசரி தேவைகள் மற்றும் பண்டிகை கால ஷாப்பிங்கிற்காக பிரம்மாண்டமாக உருவாகியுள்ள வேலவன் ஹைப்பர் மார்க்கெட் பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.
தூத்துக்குடி நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள இந்த ஹைப்பர் மார்க்கெட்டில், குடும்பத்திற்கு தேவையான அனைத்து பொருட்களும் ஒரே கூரையின் கீழ் கிடைப்பது இதன் சிறப்பம்சமாகும்.
மளிகை பொருட்கள் வாங்குவதற்கு பிரமாண்ட சூப்பர்மார்க்கெட்டில் அரிசி, பருப்பு, எண்ணெய், மசாலா பொருட்கள் உள்ளிட்ட அனைத்து மளிகை பொருட்கள், தினமும் புதிய காய்கறிகள், பழங்கள், வீட்டு உபயோக பொருட்களான சமையல் பாத்திரங்கள், பிளாஸ்டிக் பொருட்கள், எலக்ட்ரானிக் பொருட்கள், காஸ்மெடிக்ஸ், சோப், ஷாம்பு போன்ற அழகு சாதன பொருட்கள், குழந்தைகளுக்கான டயபர், பால் பவுடர், விளையாட்டு பொருட்கள்,ஜவுளி பிரிவில் பெண்களுக்கான பட்டுப் பிரிவு, குழந்தைகளுக்கான ஆடைகள், ஆடவருக்கான பிரம்மாண்ட தளம் மற்றும் பெட்ஷீட், துண்டுகள் என அனைத்தும் கிடைக்கிறது. மங்கையர் மனம் கவரும் தங்க நகைகளுக்கென்று பிரத்யேக ஷோரூம் இயங்கி வருகிறது.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அனைத்து பொருட்களுக்கும் சிறப்பு தள்ளுபடி விலையில் விற்பனை நடைபெற்று வருகிறது. மேலும் பரந்த பார்க்கிங் வசதி, ஏசி வசதி கொண்ட ஷாப்பிங், குடிநீர் வசதி, பணியாளர்களின் கனிவான சேவை என அனைத்தும் பொதுமக்களை கவர்ந்துள்ளது.
அன்றாட தேவைகளுக்காக அங்கும் இங்கும் அலையாமல், ஒரே இடத்தில் தரமான பொருட்களை நியாயமான விலையில் வாங்க முடிவதால், தூத்துக்குடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளான திருச்செந்தூர், ஓட்டப்பிடாரம், சாத்தான்குளம் பகுதி மக்கள் அதிகளவில் வேலவன் ஹைப்பர் மார்க்கெட்டிற்கு வருகை தந்து வருகின்றனர். குறிப்பாக குழந்தைகளை குதூகலப்படுத்தும் பொழுதுபோக்கு விளையாட்டு சாதனங்கள் குவிந்து கிடக்கின்றது.
தீபாவளி சமயத்தில் குடும்பத்துடன் ஷாப்பிங் செய்ய சிறந்த இடமாக வேலவன் ஹைப்பர் மார்க்கெட் திகழ்வதாக வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.


