தமிழ் மொழியின் மறுமலர்ச்சிக்கும், பெண்ணுரிமைக்கும், சமூக நீதிக்கும் வித்திட்ட புரட்சிக் கவிஞன், விடுதலைப் போரின் அக்னிக்குஞ்சு “மகாகவி பாரதியார் 105வது நினைவு தினத்தை முன்னிட்டும் மற்றும், சமூகநீதி, சமத்துவம் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்காக வாழ்நாள் முழுதும் போராடிய தியாகி இம்மானுவேல் சேகரன் 69வது நினைவு தினத்தை முன்னிட்டும் இவ்விரு தலைவர்களின் திருவுருவப்படத்திற்கும் வடக்கு மாவட்ட திமுக சார்பில் எட்டையாபுரம் சாலையில் உள்ள கலைஞர் அரங்கில் அலங்கரிக்கப்பட்ட அவர்களது படத்திற்கு வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கீதாஜீவன் மலர் தூவி மரியாதை செய்து வணங்கினார்.

நிகழ்ச்சியில் மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், மாவட்ட அவைத்தலைவர் செல்வராஜ், துணை மேயர் ஜெனிட்டா, மாநகர துணைச்செயலாளர் கீதாமுருகேசன், மாவட்ட அணி நிர்வாகிகள் அருண்குமார், கவிதாதேவி, பிரபு, நிக்கோலாஸ்மணி, கணேஷ்குமார், மாநகர அணி நிர்வாகிகள் சாரதி, ஜெயக்கனி, முருகஇசக்கி, பரமசிவம், ரூபராஜா, சாகுல்ஹமீது, ராமசந்திரன், வினோத், பெரியசாமி, பொதுக்குழு உறுப்பினர் கஸ்தூரி தங்கம், மண்டலத்தலைவர் வக்கீல் பாலகுருசுவாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.