உயர்கல்வியை தனியாரிடம் ஒப்படைக்கும் தனியார் பல்கலைக்கழக சட்டத் திருத்த மசோதாவை ரத்து செய்ய வலியுறுத்தி இந்திய மாணவர் சங்கம் தூத்துக்குடியில் நகல் எரிப்பு போராட்டம் நடந்தது.

உயர் கல்வியை தனியாரிடம் ஒப்படைக்கும் தனியார் பல்கலைக்கழக சட்ட திருத்த மசோதாவை உடனடியாக ரத்து செய்ய வலியுறுத்தி இந்திய மாணவர் சங்கம் சார்பில் தூத்துக்குடியில், வஉசி கல்லூரி நுழைவு வாயில் முன்பு நகல் எரிப்பு போராட்டம் நடைபெற்றது. இதில் மாணவர் சங்கம் மாவட்ட செயலாளர் ராம்குமார் தலைமையில் திரளான மாணவர்கள் கலந்து கொண்டனர்.