தூத்துக்குடி மாவட்டம் ஆசூர் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றத்தில் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடம் ஆன்மிககுரு அருள்திரு பங்காரு அடிகளார் அம்மா அவர்களின் 86வது அவதார பெருமங்கல விழா, ஆடிப்பூர விழா, மன்ற ஆண்டு விழா ஆகிய முப்பெரும் விழா நடைபெற்றது.
மழைவளம் வேண்டியும், தொழில்வளம் சிறக்கவும், விவசாயம் வளம்பெறவும், மக்கள் நலமுடன் வாழவும் கலச விளக்கு வேள்வி பூஜை நடைபெற்றது. குருபூஜை, வினாயகர் பூஜையுடன் துவங்கிய விழாவில் அறுங்கோண சக்கரம் அமைக்கப்பட்டு முக்கோண வடிவிலான பிரதான யாககுண்டம் அமைக்கப்பட்டு கலச விளக்கு விளக்கு வேள்விபூஜை நடைபெற்றது. வேள்வியை ஆன்மிக இயக்க மாவட்ட தலைமை ஒருங்கிணைப்பாளர் சக்தி முருகன் தீபம் ஏற்றி தொடங்கி வைத்தார்.
தகவல் தொழில்நுட்ப ஒருங்கிணைப்பாளர் கோபிநாத் ஆன்மிக சொற்பொழிவாற்றினார். அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியை கோவில்பட்டிமன்ற தலைவர் அப்பாசாமி துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் மன்ற தலைவர் சங்குத்தாய், பாமா, சீனிப்பாண்டி உட்பட பலர் கலந்து கொண்டனர்.


