தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு மேம்பாட்டுத் திட்டப்பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன், தலைமையில் இன்று நடைபெற்றது.
இதில், கிராமப்புற மேம்பாடு, வாழ்வாதாரம், வீடமைப்பு மற்றும் உட்கட்டமைப்பு தொடர்பான பல்வேறு திட்டங்களின் முன்னேற்றம் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. வளரும் பாரதம் – கிராமப்புற வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதார உறுதித் திட்டம் (VB – GRAM (G) 2026–2027) மற்றும் ‘யுக்தாரா’ (Yuktdhara) இணையதளத்தில் பணிகள் பதிவேற்றம் செய்யப்படும் நிலைகள்.
பசுமை ஊரகம் பகுதி-III (2024) நாற்றங்கால் பண்ணைப் பணிகள், தூய்மை பாரத இயக்கம் (கிராமப்புறம்), திடக்கழிவு மேலாண்மை மற்றும் ‘தூய்மை தமிழகம்’ செயலியின் செயல்பாடுகள். கலைஞரின் கனவு இல்லம் (2025-2026), முதலமைச்சரின் வீடுகள் மறுகட்டுமானத் திட்டம் மற்றும் பிரதம மந்திரி மாதிரி வீடு கட்டும் திட்டம் (2024-2025).
பிரதம மந்திரி கிராமப்புற சாலை மேம்பாட்டுத் திட்டம், முதலமைச்சரின் கிராம சாலைகள் மேம்பாட்டுத் திட்டம் (பகுதி-II 2025-26), நபார்டு XXXI (2025-26) திட்டங்கள், மாநிலங்களுக்கான சிறப்பு உதவித் திட்டம் மற்றும் கிராமப்புறச் சாலைகள் பராமரிப்புப் பணிகள். பள்ளிகளில் கட்டப்படும் சுகாதார வளாகங்கள் (2025-26), சமூக சுகாதார வளாகங்கள், நீலப்புரட்சித் திட்டம் (மீன் உற்பத்தி மேம்பாடு) மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு மையம் (பகுதி-III) திட்டப்பணிகள்.
ஆய்வுக் கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் இணை இயக்குநர் / திட்ட இயக்குநர் நா. சரவணன், செயற்பொறியாளர் இளஞ்சேரன் மற்றும் துறை சார்ந்த அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.


