கோவில்பட்டி ரோட்டரி சங்கம் சார்பில் யூனியன் கிளப் வளாகத்தில் நடந்த வாராந்திர கூட்டத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சிக்கு ரோட்டரி சங்க தலைவர் முத்து முருகன் தலைமை வகித்தார். ரோட்டரி மாவட்ட கிளப் சர்வீஸ் சேர்மன் விநாயகாரமேஷ், சாலை பாதுகாப்பு பிரிவு மாவட்ட தலைவர் முத்துச்செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ரோட்டரி உறுப்பினர் நடராஜன் இறை வணக்கம் பாடினார், உறுப்பினர் மணிகண்டன் நான்கு வழி சோதனை வாசித்தார். ரோட்டரி சங்க முன்னாள் தலைவர் ராஜ்குமார் அனைவரையும் வரவேற்றார். இதில் பள்ளி மாணவிக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டு மேஜர் டோனராக இனைத்துக் கொண்ட ராஜ்குமாருக்கு ரோட்டரி பொத்தான் அணிவிக்கப்பட்டது.
பிறந்தநாள் கொண்டாடிய ரோட்டரி உறுப்பினர் கணேசமூர்த்திக்கு சால்வை அணிவித்து வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டது. இதில் ரோட்டரி மாவட்ட முதியோர் பிரிவு தலைவர் நாராயணசாமி,ரோட்டரி மாவட்ட எழுத்தறிவு பிரிவு தலைவர் ரவி மாணிக்கம், முன்னாள் உதவி ஆளுநர்கள் எம்.எஸ்.எஸ்.வி. பாபு பரமேஸ்வரன், சீனிவாசன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் ரோட்டரி சங்க செயலாளர் ரமேஷ் குமார் நன்றி கூறினார்.


