தமிழ்நாட்டைச் சார்ந்த ஹஜ் பயணிகளுக்காக சேவையாற்ற மாநில ஹஜ் ஆய்வாளர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் தெரிவித்துள்ளார்.
மும்பையில் உள்ள இந்திய ஹஜ் குழுவானது தனது சுற்றறிக்கை எண்.7 நாள்.11.08.2026ல் ஹஜ் 2027-ல் புனித பயணம் மேற்கொள்ளவிருக்கும் தமிழ்நாட்டைச் சார்ந்த ஹஜ் பயணிகளுக்காக சேவையாற்ற மாநில ஹஜ் ஆய்வாளர்களை தற்காலிகமாக சவூதி அரேபியா அனுப்ப, நிகர்நிலை மூலம் (Online) விண்ணப்பங்களை வரவேற்கிறது.
தற்காலிகமாக பணிக்காலம் 03.04.2027 முதல் 25.06.2027 வரை சுமார் இரண்டு மாத காலமாகும். மத்திய/மாநில அரசு ஊழியர்கள், துணை இராணுவப் படைகளில் பணியாற்றும் தகுதிவாய்ந்த அலுவலர்கள் மற்றும் தன்னாட்சி அமைப்புகள் அல்லது மத்திய – மாநில அரசின் கீழ் இயங்கும் பொது நிறுவனங்களில் பணியாற்றும் நிரந்தர பணியாளர்கள் விண்ணப்பிக்க தகுதி வாய்ந்தவர்கள் ஆவர். மாநில ஹஜ் ஆய்வாளர்கள் சவூதி அரேபியாவில் பணிபுரியும் காலம் பணிக்காலமாக கருதப்படும்.
இப்பணிக்காக நிகர்நிலை மூலம் (Online) விண்ணப்பிக்கும் முறை, தகுதி, நியமனமுறை ஆகியன மும்பை இந்திய ஹஜ் குழுவின் இணைய முகவரியில் (www.hajcommittee.gov.in) அறிந்து கொள்ளலாம். நிகர்நிலை மூலம் (Online) விண்ணப்பங்கள் விண்ணப்பிக்க கடைசி நாள் 27.08.2026 என மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் தெரிவித்துள்ளார்.


