கோவில்பட்டி அருகே உள்ள காமநாயக்கன்பட்டி புனித பரலோக மாதா பேராலயத்தில் அமைச்சர் ஸ்ரீநாத் பிரார்த்தனை செய்தார்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள உலகப் புகழ்பெற்ற காமநாயக்கன்பட்டி புனித பரலோக மாதா பேராலயத்தில் விண்ணேற்பு பெருவிழா விமரிசையாக நடைபெற்று வருகிறது. இப்பெருவிழாவை முன்னிட்டு, தமிழக மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சர் ஸ்ரீநாத் பேராலயத்திற்கு வருகை தந்து, மண்டியிட்டுச் சிறப்புப் பிரார்த்தனை செய்தார்.
அமைச்சருடன் தமிழக வெற்றிக் கழகத்தின் வடக்கு மாவட்டச் செயலாளர் பாலசுப்பிரமணியன் மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பலர் உடனிருந்து பிரார்த்தனையில் கலந்துகொண்டனர்.
காமநாயக்கன்பட்டி புனித பரலோக மாதா விண்ணேற்பு பெருவிழாவை முன்னிட்டு, வரலாற்றிலேயே முதல்முறையாக ஆகஸ்ட் 14-ஆம் தேதியைத் தூத்துக்குடி மாவட்டத்திற்கு அரசு உள்ளூர் விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காகத் தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்களுக்கும், தமிழக அரசுக்கும் மற்றும் அமைச்சர் ஸ்ரீநாத் அவர்களுக்கும் பேராலய நிர்வாகம் சார்பில் நெஞ்சார்ந்த நன்றிகள் தெரிவிக்கப்பட்டன.


