கடந்த ஜூன் மாதம் 7-ஆம் தேதி என்னுடைய அண்ணன் மகன் ஸ்ரீனிவாசனின் மகள் பூப்புனித நீராட்டு விழாவிற்கு மாண்புமிகு அமைச்சர் மதன் ராஜ் அவர்கள் முத்தாலங்குறிச்சி வருகை தந்தார். அப்போது, முத்தாலங்குறிச்சி ஊருக்குள் செல்லும் சாலையோரக் கிணறு மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளதைச் சுட்டிக்காட்டி, “இந்தக் கிணற்றை மூடித்தர வேண்டும்” எனக் கோரிக்கை வைத்தேன்.
அமைச்சர் உடனடியாக இதற்கான நடவடிக்கையை எடுத்தார். அரசுப் பணத்தை எதிர்பார்க்காமல், உடனே ஒன்றிய செயலாளரை அழைத்து, “இந்த இடத்தில் தடுப்புச்சுவர் கட்டித் தாருங்கள்” எனக் கூறிச் சென்றார். நாங்களும் ஏதோ நாங்கள் கேட்டதற்காகப் பதில் சொல்கிறார் என்றுதான் நினைத்தோம். ஆனால், தற்போது வெறும் இரண்டே மாதங்களில் அவ்விடத்தில் தடுப்புச்சுவர் கட்டி முடிக்கப்பட்டு விட்டது.
அதிரடியாக எங்கள் ஊருக்குத் தடுப்புச்சுவர் அமைத்துத் தந்த மாண்புமிகு அமைச்சர் மதன் ராஜ் அவர்களுக்கு ஊர் பொதுமக்கள் சார்பில் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
— முத்தாலங்குறிச்சி காமராசு


