தென் மாவட்ட மக்களின் பயண வசதியைக் கருத்தில் கொண்டு தூத்துக்குடி, திருநெல்வேலி உள்ளிட்ட இடங்களிலிருந்து இயக்கப்படும் சிறப்பு ரயில்களின் சேவையை நீட்டித்து ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
சேவை நீட்டிக்கப்பட்டுள்ள சிறப்பு ரயில்கள்:
தூத்துக்குடி – தாம்பரம் – தூத்துக்குடி சிறப்பு ரயில் (கூடுதலாக ஒரு மாதம் நீட்டிக்கப்பட்டுள்ளது)
திருநெல்வேலி – தாம்பரம் – திருநெல்வேலி சிறப்பு ரயில்
திருநெல்வேலி – மேட்டுப்பாளையம் – திருநெல்வேலி சிறப்பு ரயில்
சென்னை சென்ட்ரல் – போத்தனூர் – சென்னை சென்ட்ரல் சிறப்பு ரயில்
இந்தச் சிறப்பு ரயில்களுக்கான பயணச் சீட்டு முன்பதிவு விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வருகிற ஆகஸ்ட் மாதத்தில் அதிக சுபமுகூர்த்த நாட்கள், சுதந்திர தின தொடர் விடுமுறை மற்றும் தென் மாவட்டங்களில் நடைபெறும் பல்வேறு கோயில் திருவிழாக்கள் காரணமாக ரயில்களில் பயணிகள் கூட்டம் அதிகரிக்க வாய்ப்புள்ளது. எனவே, பயணிகள் தங்களது பயணத் திட்டங்களை முன்னதாகவே திட்டமிட்டு, முன்பதிவு தொடங்கும் போது விரைவாக முன்பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.


