இளைஞர் வானவியல் மற்றும் விண்வெளி அறிவியல் மாநாட்டில் பங்கேற்கத் தூத்துக்குடி மாவட்டக் கல்லூரி இளங்கலை மாணவர்களுக்கு தூத்துக்குடி மாவட்ட அஸ்ட்ரோ கிளப் அழைப்பு விடுத்துள்ளது.
இதுகுறித்து தூத்துக்குடி மாவட்ட அஸ்ட்ரோ கிளப் செயலாளர் முத்துமுருகன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் “தமிழ்நாடு அஸ்ட்ரானமி சயின்ஸ் சொசைட்டி சார்பில் கல்லூரி, பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்களிடம் வானவியல் மற்றும் விண்வெளி அறிவியல் கருத்துக்களை பல்வேறு நிகழ்வுகள் மூலம் பரப்புரை செய்து வருகிறது.
இதில் கல்லூரி இளங்கலை மாணவர்களை வானவியல் மீது ஆர்வத்தை ஏற்படுத்தும் வகையில் இளைஞர் வானவியல் மற்றும் விண்வெளி அறிவியல் மண்டல மாநாடு தமிழகத்தின் சென்னை, கோவை, மதுரை, சேலம், சிவகங்கை, தஞ்சாவூர், திருச்சி, திருநெல்வேலி, திருப்பத்தூர், திருவண்ணாமலை உள்ளிட்ட பத்து மண்டலங்களில் நடத்தப்பட்டு அதில் தேர்வு செய்யப்படும் கல்லூரி மாணவர்கள் மாநில அளவில் கோவையில் நடைபெற உள்ள மாநில மாநாட்டில் பங்கேற்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதில் கல்லூரி இளங்கலை மாணவர்கள் வானவியல் குறித்த ஆய்வுக் கட்டுரைகள், போஸ்டர்கள் தயாரிப்பு, குறும்படம் தயாரிப்பு, அஸ்ட்ரானமி போட்டோகிராபி, புதுமையான விளையாட்டுக்கள் உருவாக்குதல் உள்ளிட்ட நிகழ்வுகளில் இணையதள வழியில் பதிவு செய்து பங்கேற்கலாம். பதிவு செய்த கல்லூரி இளங்கலை மாணவர்களுக்கு மாநாட்டில் பங்கேற்பது குறித்து வழிகாட்டுதல்கள் வழங்கப்படும்.மாநில மாநாட்டில் தேர்வு செய்யப்படும் இளங்கலை கல்லூரி மாணவர்களுக்கு விண்வெளி அறிவியல் துறையில் பயிற்சிகள் பெற வழிகாட்டுதல்கள் வழங்கப்படும்
இதில் இளைஞர் வானவியல் மற்றும் விண்வெளி அறிவியல் மாநாட்டில் பங்கேற்க விரும்பும் கல்லூரி இளங்கலை மாணவர்கள் https://tass.co.in/yassc-2026 என்ற இணைய வழியில் ஜுலை 31ம் தேதிக்குள் பதிவு செய்து பங்கேற்கலாம்.
மேலும் கூடுதல் விபரங்களுக்கு தூத்துக்குடி மாவட்ட அஸ்ட்ரோ கிளப் செயலாளர் 9486250747என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்” எனத் தெரிவித்துள்ளார்


