தூத்துக்குடி ஸ்பிக் நகர் இன்னர் வீல் கிளப் புதிய செயற்குழு உறுப்பினர்கள் பதவி ஏற்பு விழாவில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
தூத்துக்குடி ஸ்பிக் நகர் இன்னர் வீல் கிளப் புதிய செயற்குழு உறுப்பினர்கள் பதவி ஏற்பு விழா ரோட்டரி ஹாலில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ஆரத்தி கண்ணன் தலைமை வகித்துப் புதிய செயற்குழு உறுப்பினர்களைப் பதவி அமர்த்தினார். இவ்விழாவில் லலிதா சுப்பிரமணியம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.
இந்த நிகழ்ச்சியில் பிடிசி வெயிலா கே. ராஜா முன்னிலை வகித்தார். கிளப் உறுப்பினர்கள், முன்னாள் தலைவி லீனா உட்படப் பலர் கலந்து கொண்டனர்.விழாவில், வாழ்வாதார மேம்பாட்டிற்காகப் பயனாளிகளுக்குத் தையல் எந்திரம், மாவு அரைக்கும் எந்திரம் மற்றும் பள்ளி குழந்தைகளுக்கு நோட்டுப் புத்தகங்கள், பைகள் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.


