தூத்துக்குடி பக்கிள்புரம் பகுதியில் இன்று மதியம் 2.30 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படும் என்று மின்வாரிய அலுவலகம் அறிவித்துள்ளது.
தூத்துக்குடி சிதம்பரநகர் பிரிவு அலுவலகத்திற்கு உட்பட்ட மின்மாற்றி எண் 28-இல் பழுதடைந்த தாழ்வழுத்த மின்கம்பம் மாற்றும் பணி நடைபெற உள்ளதால், இன்று பக்கிள்புரம் பகுதியில் மின்விநியோகம் நிறுத்தப்படுகிறது.
மின்கம்பம் மாற்றும் அவசரப் பராமரிப்புப் பணிகள் காரணமாக, பக்கிள்புரம் குடியிருப்புப் பகுதிகளில் மதியம் 12:30 மணி பிற்பகல் 2:30 மணி வரை மின்விநியோகம் இருக்காது. இப்பராமரிப்புப் பணிக்குத் துறை சார்ந்த நுகர்வோர் முழு ஒத்துழைப்பு நல்குமாறு மின்வாரிய நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


