தூத்துக்குடி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் வெடிகுண்டு கண்டறிதல் மற்றும் செயலிழக்கச் செய்யும் பிரிவில் (BDDS) பாதுகாப்புப் பணிக்காகப் பயன்படுத்தப்பட்ட 177 உபகரணங்கள் பொது ஏலம் விடப்பட உள்ளதாக மாவட்டக் காவல் அலுவலகம் அறிவித்துள்ளது.
இந்த பொது ஏலம் வரும் 09.07.2026 அன்று காலை 10.00 மணிக்குத் தூத்துக்குடி மாவட்டக் காவல் அலுவலகத்தில் வைத்து நடைபெற உள்ளது. இப் பொது ஏலத்தில் உலோகக் கண்டறிதல் இயந்திரம் (Metal Detector), தேடுதலுக்குப் பயன்படுத்தப்படும் கண்ணாடிகள், தொலைநோக்கிகள் (Telescopes), தேடல் விளக்குகள் (Search Lights) உள்ளிட்ட 177 முக்கியப் பாதுகாப்புப் பொருட்கள் ஏலம் விடப்பட இருக்கின்றன.
இந்த ஏலத்தில் பொதுமக்களோ அல்லது ஆர்வம் உள்ளவர்களோ கலந்துகொள்ள எந்தவிதமான நுழைவுக் கட்டணமும் செலுத்தத் தேவையில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏலம் எடுப்பவர்கள் தங்களின் ஏலத்தொகை மற்றும் அதற்குரிய ஜிஎஸ்டி (GST) தொகையினை மாவட்டக் காவல் அலுவலகத்தில் ஏலம் எடுக்கப்பட்ட அன்றைய தினமே உடனடியாகச் செலுத்தி, ஏலம் எடுத்தப் பொருட்களைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.
இந்த ஏலம் தொடர்பான கூடுதல் விபரங்கள் மற்றும் சந்தேகங்களுக்கு 9498196118 என்ற தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொண்டு விபரங்களைப் பெற்றுக் கொள்ளலாம். மேலும், எவ்வித முன்னறிவிப்புமின்றிக் குறிப்பிட்ட இந்த ஏலத்தினைத் தற்காலிகமாகவோ அல்லது முழுமையாகவோ நிறுத்தி வைப்பதற்குக் காவல் கண்காணிப்பாளருக்கு (SP) முழு அதிகாரம் உள்ளது என்றும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.


