தூத்துக்குடி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் ஸ்டார் அகாடமி மாவட்ட விளையாட்டுப் பயிற்சி மையத்தில் டேக்வாண்டோ பயிற்சியாளர் பணிக்குத் தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை மூலம் தூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்டார் விளையாட்டுப் பயிற்சி மையத்தின் கீழ் டேக்வாண்டோ விளையாட்டானது தேர்வு செய்யப்பட்டுள்ளது. டேக்வாண்டோ பயிற்றுநர் பதவிக்கான விண்ணப்பங்களைத் தூத்துக்குடி மாவட்ட விளையாட்டரங்க அலுவலகத்தில் அலுவலக நேரங்களில் நேரில் பெற்றுக் கொள்ளலாம்.
இப்பணிக்கு விண்ணப்பிப்பவர்களுக்கான அதிகபட்ச வயது வரம்பு 50 ஆக இருக்க வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களைத் தூத்துக்குடி மாவட்ட விளையாட்டரங்க அலுவலக முகவரியில் வரும் 30.06.2026 மாலை 5 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பித்தவர்களுக்கான நேர்முகத் தேர்வு மற்றும் உடல் தகுதித் தேர்வு, மாவட்ட விளையாட்டு அலுவலகத்தில் 01.07.2026 அன்று நடைபெறும். நேர்முகத் தேர்வில் பங்கேற்க வரும்போது தங்களின் உரிய அசல் மற்றும் நகல் சான்றிதழ்களைக் கட்டாயம் கொண்டு வர வேண்டும்.
இந்தத் டேக்வாண்டோ பயிற்சியாளர் பணியானது முற்றிலும் தற்காலிகமானதாகும். இந்த நியமனத்தின் அடிப்படையில் எவ்வித வேலைவாய்ப்பு சலுகைகளோ அல்லது நிரந்தரப் பணியோ கோர இயலாது. கூடுதல் விபரங்கள் தேவைப்படுவோர், “மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், மாவட்ட விளையாட்டரங்கம், ஜார்ஜ் ரோடு, தூத்துக்குடி” என்ற முகவரியிலோ அல்லது 0461 2321149 மற்றும் 7401703508 ஆகிய தொலைபேசி எண்களிலோ தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் தெரிவித்துள்ளார்.


